யூட்யூப் வீடியோ தளத்தின் புதிய நிர்வாகியாக நீல் மோகன் பொறுப்பேற்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது பொறுப்பில் இருந்து அதன் நிர்வாக அதிகாரியான சூசன் வோஜ்சிக்கி விலகினார். இதை அடுத்து அவருக்கு பதிலாக, இந்திய-அமெரிக்கரான நீல் மோகன் கூகுளின் வீடியோ பிரிவு யூடியூப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கிறார். 


உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையில் இருக்கும் இந்திய-அமெரிக்க நிர்வாகிகளின் பட்டியலில் இதை அடுத்து மோகன் இணைகிறார். மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண் மற்றும் ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய ஜாம்பவான்களின் தலைமையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிஇஓக்களின் பட்டியலில் அவர் இணைவார். இந்திரா நூயி 2018 இல் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பு பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 12 ஆண்டுகள் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


யார் இந்த நீல் மோகன்?


* மோகன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்.
* 2008ல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். 
* 2015ல் யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியானார்.
* இதை அடுத்து வலுவான தயாரிப்பு மற்றும் யூஎக்ஸ் குழுவை நிறுவினார். இதை அடுத்து YouTube TV, YouTube Music, அதன் Premium மற்றும் Shorts உட்பட அதன் மிகப்பெரிய தயாரிப்புகள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.
* மோகன் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பணிபுரிந்துள்ளார்.
மேலும் ஸ்டிட்ச் ஃபிக்ஸ், மரபணு மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனமான 23andMe குழுவிலும் அவர் உள்ளார்.
*2007ல் கூகுள் கையகப்படுத்திய டபுள் கிளிக் என்ற நிறுவனத்தில் அவர் அதற்கு முன்பு ஆறு வருடங்கள் இருந்தார். பின்னர் கூகுளில் காட்சி மற்றும் வீடியோ விளம்பரத்தின் மூத்த துணைத் தலைவராக சுமார் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.


கூகுளின் முக்கிய ப்ளார்பார்ம் யூட்யூப்! முதன்மையானதாக இருக்கக் கூடிய யூட்யூப் கூடிய விரைவில் அதிரடியான அப்டேட்டை கொடுக்கவிருக்கிறது. அதில் ஒடிடி தளத்தினைப்போல் படங்கள் ரிலீசாகவிருக்கின்றன.  


சமீபத்தில் திரையரங்கு அளவிற்கு இல்லை என்றாலும், பெரும்பாலான படங்கள் ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன. குறிப்பாக உலக அளவில் ஓடிடிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு என்பது திரைத்துறையில் மிகப்பெரிய மார்க்கெட்டினை திறந்து வைத்துள்ளது எனலாம். தொடக்கத்தில் ஓடிடிக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் பின்னர் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 


நெட்பிள்க்ஸ், அமேசான், சோனி லைவ், டிஷ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த படங்கள், சீரிஸ்கள், என ரிலிசாகி வந்தன. குறிப்பாக சீரிஸ்கள் உலக அளவில் சென்றடையவும், வெற்றி பெறவும் முக்கிய காரணமாக இருந்தது. இது குறித்து, யூட்யூப் நிறுவனத்தின் சார்பில், வால் ஸ்டிரீட் ஜெர்னலுக்கு தெரிவித்துள்ளதாவது, யூட்யூப்பும் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வதற்கான யோசனையில் ஈடுபட்டுள்ளது.