பொது இடங்களில் வேறு ஒரு சார்ஜர் பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்வது ஆபத்தானது என்று எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது உலகின் மிக முக்கியமான சட்ட அமலாக்க நிறுவனமான FBI.


 மொபைல் சார்ஜிங்


மொபைல் பயன்பாடு என்பது நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட விஷயமாகிவிட்டது. முழு நேரமும் மொபைல் பயன்படுத்தி பல நேரங்களில் சார்ஜ் போட மறந்திருப்போம், ஒருவேளை அதிகம் பயன்படுத்தி சார்ஜை காலி செய்திருப்போம். இதனால் எப்போதுமே நம்மோடு பலர் சார்ஜரை உடன் வைத்திருப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் சிலர் சர்ஜரை மறந்து சென்று வேறு யாருடைய சார்ஜரிலாவது சார்ஜ் செய்வார்கள். வெளியில் செல்லும்போதோ, பயணம் செல்லும்போதோ காத்திருக்கும் இடங்களில் சார்ஜ் போட்டுக்கொள்வது பலரின் வழக்கமாகிவிட்டது.



முதன்முறையாக FBI எச்சரிக்கை


இதற்கேற்ப ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட காத்திருப்பு அறைகளில், காத்திருக்கும் இடங்களில் சார்ஜிங் பாயிண்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்போது சார்ஜர் கொண்டு வராதவர்கள் அங்குள்ளவர்களிடம் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் ஏதோ மொபைல் கடையிலோ அல்லது வேறு ஏதோ கடையிலோ சார்ஜ் ஏற்றுவோம். இதில் பெரும் ஆபத்து உள்ளதென்று சில நாட்களாகவே கூறி வந்தாலும், அதிகாரப்பூர்வமாக யாரும் எச்சரிக்கை விடுக்காத நிலையில், இப்போது இந்த எச்சரிக்கை FBI வழியாக வந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: IPL Points table: பூரான் அடித்த அடி, லக்னோ அபார வெற்றி.. மாற்றம் கண்ட ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிள்


பணத்தையும் தரவுகளையும் திருட முடியும்


பொது இடங்களில் உள்ள சார்ஜிங் நிலையங்களில், மக்கள் தங்கள் தொலைபேசிகளை சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் உள்ள சார்ஜர்கள் ஹேக்கர்களின் சொர்க்கமாக மாறிவிட்டன. சார்ஜிங் போர்ட் மூலம் மால்வேருடன் டிவைசை இணைக்க உதவுகிறது. அதன்மூலம் ஹேக்கர்கள் மொபைலில் உள்ள தரவுகளையும், பணத்தையும் கூட திருட முடியும் என்று கூறுகிறார்கள்.



இதற்கு பெயர் ஜூஸ் ஜாக்கிங்


இந்த சைபர் கிரைமிர்க்கு ஜூஸ் ஜாக்கிங் என்ற சொல் உள்ளது. சார்ஜிங் சாதனங்கள் மூலம் ஹேக் செய்யப்படும் மால்வேர் பெயராக இது உள்ளது. ஆனால் இதனை நாள் இதுகுறித்த அச்சம் இல்லாவிட்டாலும், FBI ஒரு அச்சுறுத்தலை தருகிறது என்னும் பட்சத்தில் சீரியஸாக எடுத்துக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை தவிர்க்க எளிதான ஒரே வழி, எப்போதுமே சார்ஜிங் அடாப்டரை கூடவே வைத்துக்கொள்ளுதல் சிறந்தது. எங்கு சார்ஜ் செய்தாலும் உங்களது சொந்த சார்ஜரில் சார்ஜ் செய்வது சிறந்தது. பவர் பேங்க் வைத்துக்கொண்டு அதிலேயே சஜார்ஜ் செய்துகொள்வது அதைவிட சிறந்தது. அடுத்தமுறை வேறு ஒரு சார்ஜரை பயன்படுத்தி பொது இடங்களில் சார்ஜிங் செய்யும்போது, உலகின் மிக முக்கியமான சட்ட அமலாக்க நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளதை நினைவில் கொள்வது நல்லது.