எலான் மஸ்கும் ட்விட்டரும் :
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்கை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் சமீபத்தில் மிகப்பெரிய சமூக ஊடகமான ட்விட்டரை தான் வாங்கப்போவதாக அறிவித்தார். ஆனால் சில நாட்களிலேயே ட்விட்டரில் ஏராளமான போலிக்கணக்குகள் உள்ளன என கூறி ட்விட்டரை வாங்க விருப்பமில்லை என எலான் மஸ்க் தெரிவித்துவிட்டார். எலான் மஸ்க் செய்யும் ட்வீட்டுகள் உலக பொருளாதாரத்துடன் தொடர்புப்படுத்த முடியும் . அந்த அளவுக்கு இவர் ட்வீட் அடிப்படையில் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் . இப்படியானவர் ட்விட்டரில் போலிக்கணக்குகள்தான் அதிகம் என்றால் சும்மா இருக்குமா ட்விட்டர் , அவர் மீது வழக்கு தொடர்ந்தது. அதற்கு அவர் தரப்பு வாதங்களை தாக்கல் செய்தார். குறிப்பாக இந்தியாவின் 2021 ஆம் ஆண்டு புதிய ஐடி விதிகளை மேற்கோள் காட்டி , அந்தந்த நாட்டின் விதிகளுக்குள் அடங்கும் வகையில்தான் ட்விட்டர் செயல்படுகிறது என்றார்.
எலான் கணக்கெடுப்பு :
இந்த நிலையில் ட்விட்டர் தினசரி பயனர்களில் 5% க்கும் குறைவானவர்கள் போலி/ஸ்பேம் இல்லையா ? என்ற கணக்கெடுப்பை தொடங்கினார். மேலும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு சவால் விடுத்து "ட்விட்டரில் <5% போலி அல்லது ஸ்பேம் தினசரி பயனர்கள் உள்ளனர் என்பதை அவர் பொதுமக்களுக்கு நிரூபிக்கட்டும்!" என்றார்.
ஜூலை 29 அன்று ட்விட்டருக்கு எதிராக மஸ்க் ஒரு எதிர் வழக்கைத் தாக்கல் செய்தார். ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி,பயனர் கணக்குகள் போலி கணக்குகளா அல்லது உண்மையான நபர்களா என்பதை நிறுவனம் எவ்வாறு அளவிடுகிறது என்பது பற்றிய சில விவரங்களை நிறுவனம் உறுதிப்படுத்தினால், ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு எலான் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது