தீபாவளி 24 அக்டோபர் அன்று உலகம் முழுவதும் இருக்கும் இந்து மதத்தினரால் அனுசரிக்கப்படுகிறது. வழக்கமாக தனது செர்ச் இஞ்சின் பக்கத்தில் பிரத்யேக டூடுல்களுடன் பண்டிகைகளைக் கொண்டாடும் கூகுள், இந்த முறை தீபாவளியைச் சற்று வித்தியாசமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் ஒரு இண்டராக்டிவ் அனுபவத்தை அளித்துள்ளது, இது பயனர்கள் தீபாவளியைக் கொண்டாட விர்ச்சுவல் விளக்குகளை  திரையில் ஏற்றி வைக்க உதவுகிறது. கூகுள் வழங்கும் இந்த தீபாவளி இன்டராக்டிவ் மினி-கேமை அணுக, இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:




> Google.com-க்குச் செல்லவும்.
> தேடல் பகுதியில், "Diwali" என்று பார்க்கவும். நீங்கள் "Diwali 2022"ஐயும் தேடலாம்.
> திரையின் மேல் இடதுபுறத்தில், தேடல் பகுதியின் கீழே, பளபளப்பான விளக்கு, உங்கள் கவனத்தை ஈர்க்கும்.
> அனிமேஷன் செய்யப்பட்ட அந்த தியா மீது கிளிக் செய்யவும்.
> நீங்கள் அதைச் செய்தவுடன், திரை சற்று இருட்டாகிவிடும், அதை அடுத்து எட்டு அனிமேஷன் தியாக்கள் திரையில் தோன்றும்.
> உங்கள் மவுஸ் பாயிண்டருக்குப் பதிலாக லைட் விளக்கை மாற்றியிருப்பதை நீங்கள் இப்போது கவனிப்பீர்கள். நீங்கள் விரும்பியபடி அதை திரையில் நகர்த்தலாம்.
> மற்ற விளக்குகளின் அருகில் எரியூட்டப்பட்ட தியாவை எடுத்துச் சென்று, அவற்றை ஒவ்வொன்றாக ஒளிரச் செய்யலாம்.
> நீங்கள் அனைத்து விளக்குகளையும் ஒளிரச் செய்தவுடன், திரை சிறிய நட்சத்திரங்களால் நிரப்பப்படும்.
> திரை தொடர்ந்து பிரகாசமாகி, விரைவில் முதன்மை Google தேடல் திரைக்குத் திரும்புவீர்கள்.
> மீண்டும் தொடங்க முதல் விளக்கை மீண்டும் கிளிக் செய்யலாம்.


மினி-கேமை விட இண்ட்ராக்டிவ் அனுபவம் சிறந்ததாக அமைந்துள்ளது. மேலும் கூகுளின் விர்ச்சுவல் தீபாவளி கொண்டாட்டம் வழக்கமான கூகுள் டூடுல்களில் இருந்து வரவேற்கத்தக்க மாற்றமாகும்.


சுவாரஸ்யமாக, மறைந்த ஆஸ்திரேலிய நாட்டுப் பாடகர் ஸ்லிம் டஸ்டியைக் கொண்டாடுவதற்காக கூகுள் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் சிறப்பு கூகுள் டூடுலை வெளியிட்டுள்ளது. ஏறக்குறைய ஏழு தசாப்தங்களாக நீடித்த அவரது வாழ்க்கையுடன், டஸ்டி பல ஆண்டுகளாக பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டார், ஆஸ்திரேலிய மக்களால் அவர் நேஷனல் ட்ரெஷர் எனக் கருதப்பட்டார். அவரை கௌரவிக்கும் வகையில் அந்தப் பகுதியில் தனது டூடுளை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.