சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப் சாட்டிற்கு அடிமையாகியதால் தனது 11 வயது சிறுமி தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார். 


 “அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஸ்னாப் சாட் என்னும் புகைப்படம் பகிரும் செயலியை அதிகமாக பயன்படுத்தியதன் காரணமாக எனது மகள் செலினா ரோட்ரிக்ஸ் உயிர் இழந்தார். அந்த செயலி பயன்படுத்துவதில் அடிமையாகி இரண்டு ஆண்டுகளாக எனது மகள் மீண்டு வர போராடினேன்.  எனது மகள் உயிரிழப்புக்கு சமூக வலைதள நிறுவனமான “மேட்டா” தான் காரணம்” என்று அவரது தாய் வழக்கு தொடுத்து உள்ளார். மேலும் ”ஆபத்தான வழிகளில் ஸ்னாப்சாட் பயனர்களை வழி நடத்துகிறது. செயலி தயாரிப்பில் குறைபாடு, அலட்சியம் இருக்கிறது” என்று செலினாவின் தாய் குற்றம் சாட்டினார்.


இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில், யு.எஸ். ஸ்டேட் அட்டர்னி ஜெனரல் குழு, இன்ஸ்டாகிராம் செயலி குழந்தைகள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் நோக்கில் செயல்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்தது. சமூக வலைதளம், சிறுவர்களின் மன ஆரோக்கியம், நல்வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயங்களை போதிக்க கூடாது என்றும் தெரிவித்தது.


இந்த வழக்கால் மேட்டா மற்றும் ஸ்னேப்சாட் நிறுவனங்களுக்கு சமூக ஊடகத்தில் பலர் கண்டனம் தெரிவித்தனர். சமூக ஊடகத்தில் சிறுவர்கள் ஆர்வத்தில் புகைப் படத்தை வெளி விட்டுவிடுகின்றனர். இதனை சிலர் மார்பிங் எடிட் செய்து அனைத்து வித சமூக வலைதளங்களிலும் பதிவிடுகின்றனர். இதனால் இளம் வயதிலேயே பெண் குழந்தைகள் ஆபாச தொல்லைக்கு ஆளாகுகின்றனர். இதனை கட்டுப்படுத்தவும் பாதுகாப்புகளை வழங்கவும் டிஜிட்டல் வளாகத்தில் மேட்டா தவறிவிட்டது. இது குறித்து மேட்டா மற்றும் ஸ்னாப் பதிலளிக்கக் கூட இல்லை என்ற குற்றாச்சாட்டும் எழுந்தது.


மேட்டா செய்தித் தொடர்பாளர் நவம்பரில்,  “நிறுவனத்திடம் பாதுகாப்பின்மை இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, அவதூறு, சமூக ஒப்பீடுகள் மற்றும் உடல் உருவ சிக்கல்களைக் கையாளும் பயனர்களுக்கு உதவ புதிய அம்சங்களை நாங்கள் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம்" என்று தெரிவித்தார்.


கடந்த ஆண்டு இந்தியாவில் சமூக வலைதளத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். அவதூறு, ஆபாசம், இனவெறி, சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நட்பு நாடுகளுடனான உறவு தொடர்பான கருத்துகளை தடை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவு அல்லது அரசு உத்தரவு கிடைத்த 36 மணி நேரத்தில் ஆட்சேபனைக்குரிய அல்லது சட்ட விரோதமான கருத்துகளை சமூக வலைதளங்கள் முடக்கம் அல்லது நீக்க வேண்டும். ஒரு செய்தியை பரப்பும் முதல் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும். சைபர் பாதுகாப்பு விசாரணை அல்லது சட்ட விதிமீறலுக்காக, விசாரணை அமைப்புகள் கேட்கும் தகவல்களை 72 மணி நேரத்தில் வழங்க வேண்டும்.


இது போன்று பல விதிமுறைகளை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.