தொழில்நுட்ப சந்தையில் அறிமுகமாகும் சில ரோபோக்கள் நம்மை வியக்க வைப்பதாக இருக்கும். அவ்வகை ரோபோக்கள் மனித வாழ்வுக்கு பயனுள்ளது மற்றும் பயனற்றது என்ற விவாதத்தை தாண்டி சில சுவாரஸ்யங்களை கொண்டதாக இருக்கு. அந்த வகையில்  தற்போது அறிமுகமாகியுள்ள பச்சோந்தி ரோபோ ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தென் கொரியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய பச்சோந்தி ரோபோவானது, சுற்றுப்புறத்திற்கு ஏற்ப தனது நிறத்தை மாற்றியமைத்துக்கொள்ளும் திறன் படைத்தது. 




நேச்சர் கம்யூனிகேஷன் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ரோபோ பச்சோந்தி குறித்து அதன் இணை இயக்குநர் ஹியோன்சோக் கிம் கூறுகையில் , தான் வெவ்வேறு விதங்கள் மற்றும் நிறங்களில் கூடிய பச்சோந்திகளை மிருக காட்சி சாலையில் பார்த்துள்ளேன் .அவை என்னை வெகுவாக கவர்ந்தது அதனை அடிப்படையாக வைத்துதான் இந்த ரோபோ பச்சோந்தியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்கிறார். இந்த ரோபோ பச்சோந்தியின் கண்களில் பொறுத்தப்பட்ட கேமரா மூலம் பொருட்களின் நிறங்களை அறிந்து, அந்த தகவலை அனுப்புகிறது. பின்னர் மூளை போல செயல்படும் அமைப்பு ஒன்றில் உள்ள முதன்மை நிறங்கள் என அழைக்கப்படும் சிவப்பு, பச்சை, ஊதா மூலமாக , பொருளின் நிறத்திற்கு ஏற்ப அசல் பஞ்சோந்தி போல தனது தகவமைப்பை  மாற்றிக்கொள்கிறது. இந்த ரோபோ பச்சோந்தியின் தோல்தான் , இந்த நிற மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது ஒரு திரை போல வடிவமைத்துள்ளனர்.  அந்த திரை தெர்மோக்ரோமிக்  என்னும் திரவ படிக மை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது வெப்பநிலைக்கு ஏற்ற மாதிரியாக செயல்படும் பண்புடையது.


 



 


பார்பதற்கு பல்லி போல இருக்கும் இது பண்பில் மட்டுமே பச்சோந்தியை ஒத்திருக்கிறதே தவிர, தோற்றத்தில் குழந்தைகள் விளையாடும் பொம்மை போலதான் இருக்கிறது. ஆனால் இது ஒரு பழைய கால பச்சோந்தி வகை  என்கின்றனர் இதனை உருவாக்கியவர்கள். அசல் பச்சோந்த்தியை போல  ரோபோவை உருவாக்குவது மிகவும் சிக்கலானது  மற்றும்  சவாலானது என்கின்றனர் வடிவமைப்பாளர்கள். முன்னதாக இந்த ரோபோவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் அதன்  இன்புட் மற்றும் அவுட்புட் என்னவாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை பிரச்சனை இருந்ததாக கூறுகின்றனர். பச்சோந்தியில் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.   கழுகு , காகம் போன்றவற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பச்சோந்திகள் இடத்திற்கு ஏற்ப தங்களின் நிறங்களை மாற்றியமைத்துக்கொள்ளும்.  இதற்கு ஏற்ற மாதிரியான உடலமைப்பை இயற்கையாகவே அவை கொண்டிருப்பதுதான் படைப்பின் ஆச்சர்யம். அதன் தோலிற்கும்  மூளைக்கும் இடையில் இடைவிடாத சிக்னல் மறிமாற்றம் நடந்துக்கொண்டிருக்கிறது. அதுவே அதன் நிறத்தை மாற்றுவதற்கு உதவியாக உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டுதான் ரோபோ பச்சோந்தியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.