இந்தியாவில் விற்பனை செய்து வரும் பிரபலமான இ-வர்த்தக இணையதளங்களில் ஒன்று அமேசான் தளம். இந்த தளத்தில் வாடிக்கையாளர்கள் பல்வேறு பொருட்களை வாங்கி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் இங்கு விற்கபட்ட பொருள் தொடர்பாக தற்போது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அமேசான் தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கருக்கலைப்பு தொடர்பான மருந்து ஒன்று விற்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த மருந்து எந்தவித மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது இந்த கருக்கலைப்பு மருந்து பில் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்த மருந்து ஓடிசாவில் இருந்து அமேசான் தளத்தில் பதிவாகி விற்பனைக்கு வந்தது கண்டறியப்பட்டது. அந்த விவரத்தை வைத்து காவல்துறையினர் நடத்திய ஆய்வில் அம்மருந்து பதிவு செய்யப்பட்டிருநத இடம் போலியானது என்று தெரியவந்துள்ளது. மேலும் அந்த மருந்தை விற்பனை செய்த நபர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி அமேசான் தளத்தில் பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
கருகலைப்பு தொடர்பான மருந்து மருந்துகள் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் சட்டம் 1940-ன்படி விற்பனைக்கு நெறிமுறைப்படுத்தப்பட்ட அட்டவணையில் உள்ளது. மேலும் மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 2002 மற்றும் அதன் விதிகள் 2003-ன்படி இந்த மருந்தை மருத்துவர்கள் முன்னிலையில் மருத்துவமனையில் மட்டுமே பயன்படுத்த முடியும். அப்படி இருக்கும் போது இந்த மருந்தை அமேசான் தளம் தன்னுடைய இ-வர்த்தக தளத்தில் விற்பனை செய்துள்ளது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சிக்கல்களில் அமேசான் நிறுவனம் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஒரு முறை இந்திய தேசிய கொடியை அவமதித்து தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. அப்போது அமேசான் நிறுவனத்திற்கு இந்தியர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:வோடோபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!! இனி நீங்க பணத்தை சேமிக்கலாம்!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்