சீனா, செயலிகள் மூலமாக இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தாலும் , அதன் பிறகு பப்ஜியின் இடத்தை பிடிக்க CALL OF DUTY, FAUG-G என நிறைய மொபைல் கேம் சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால் பப்ஜி இடம் நிரப்பப்படவில்லை. மீண்டும் பப்ஜியை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
அடுத்த அப்டேட்டாக பப்ஜி விளையாட்டின், இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA” என அந்நிறுவனம் அறிமுகம் செய்தது . இந்த புதிய பெயருடன் முன்பதிவை தொடங்கியுள்ளது பப்ஜி. Battlegrounds Mobile India என்ற பெயரில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் களம் இறங்கியுள்ளது. இதுவரை ரிலீஸ் தேதி எப்போது என அறிவிக்கப்படாத நிலையில் தற்போது 15 நொடி வீடியோ டீசர் வெளியாகியுள்ளது. அதில் leval 3 backpack இடம்பெற்றுள்ளது
இது தடை செய்யப்பட்ட பப்ஜியில் இருந்தமிகப்பிரபலமான ஒன்று. அது புதிய கேமிலும் இடம் பெற்றுள்ளது. வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. Battlegrounds Mobile Indiaவும் பப்ஜியை போலவே சுவாரஸ்யமானதாக இருக்குமென ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஜூன் மாதம் Battlegrounds Mobile India ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Twitter Verification : ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்குவது எப்படி?
இந்தியாவுக்கான பிரத்யேக தயாரிப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பயனர்களையும், இந்திய சந்தையையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க இந்தியாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஆன்லைன் விளையாட்டு என்றாலும் இந்திய எல்லையைத் தாண்டி யாருடனும் சேர்ந்து நாம் விளையாட முடியாது. முன்பு உலகளவில் யார் கூட வேண்டுமானாலும் இணைந்து விளையாடும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தமுறை பப்ஜி இந்தியாவுக்குள் மட்டுமே விளையாட முடியும். விளையாட்டில் எல்லை தாண்டி கூட்டணி வைக்க முடியாது எனக் கூறப்படுகிறது.
இந்த முறை பப்ஜி விளையாடுபவர்களுக்கான வயது வரம்பில் அந்நிறுவனம் கறார் காட்டுவதாக தெரிகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தானக இன்ஸ்டால் செய்து விளையாடும் முடியும் என்றும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர்களின் அனுமதி பெற்றே விளையாடும் வகையில் மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாகவும் தெரிகிறது. வயதுவரம்பை தீர்மானிப்பதை பப்ஜி எந்த அளவுக்கு சாத்தியப்படுத்த முடியும் என்ற சந்தேகங்கள் எழுந்தாலும், வயதுவரம்பில் நிச்சயம் உரிய கட்டுப்பாடுகள் உண்டு என்றே கூறப்படுகிறது. அதுபோல 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஒருநாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும், அதேபோல ரூ.7000க்கு மேல் பப்ஜியில் செலவு செய்ய அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது
செல்போனுக்கு விளம்பரம் வந்து குவியுதா? இந்தாங்க சில டிப்ஸ்! உங்க செல்போன் இனி க்ளீன்!