உள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அரட்டை செயலி, சமூக ஊடகங்களிடையே குறுஞ்செய்தி பயன்பாட்டுக்கு பிரபலமாகி வருகிறது. சென்னையை அடிப்படையாகக் கொண்ட ஸோஹோ நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது. முன்னதாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸோஹோ நிறுவனம் இந்த செயலியை அறிமுகம் செய்தது. வாட்ஸப் தனது தனியுரிமை கொள்கையில் மாற்றங்கள் செய்த பிறகு இந்த செயலி உருவாக்கப்பட்டது.

Continues below advertisement

அது என்ன அரட்டை செயலி? (What Is Arattai)

  • இயல்பாக பேசிக் கொண்டிருப்பதே அரட்டை என்பதற்கான அர்த்தம் ஆகும். இந்த செயலி மூலம்
  • குறுஞ்செய்திகளை அனுப்பலாம்
  • வாய்ஸ் மெஜேஜ்களை அனுப்ப முடியும்.
  • வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளலாம்.
  • ஸ்டோரி வைக்கலாம்.
  • குழுக்கள், சேனல் வசதியும் உண்டு.
  • மொபைல், டேப், கணினிகளில் இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.
  • அதேபோல பிற செயலி தளங்களில் இருந்தும் உரையாடலை ஏற்றுமதி செய்யவும் அரட்டை செயலி, தனது பயனர்களை அனுமதிக்கிறது.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

அரட்டை செயலியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இலவசமே. இதற்கு முதலில் ஆண்ட்ராய்டு (Google Play Store) மற்றும் ஐஓஎஸ் iOS (Apple App Store) தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மொபைல் எண்ணை பயன்படுத்தி, உள்ளீடு செய்து, செயலியைப் பயன்படுத்தலாம்.

இந்த செயலியில், அழைப்புகளுக்கு மட்டும் அதி உயர் பாதிப்பு வசதி (end-to-end encryption) அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் செய்திகளுக்கு அந்த வசதி கிடையாது.

Continues below advertisement

ஸோஹோ நிறுவனத்தின் செயலி (Zoho Corporation)

இந்தியாவின் மென்பொருள் துறையில் நீண்டகாலமாக உள்ள நிறுவனமான ஸோஹோ கார்ப்பரேஷனால் அரட்டை செயலி 2021-ல் உருவாக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோரால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், மின்னஞ்சல், CRM, மனிதவளம், கணக்கியல் மற்றும் திட்ட மேலாண்மை போன்ற செயல்பாடுகளில் 55-கும் மேற்பட்ட வணிக பயன்பாடுகளை வழங்குகிறது. ஸோஹோ 150 நாடுகளில் கோடிக்கணக்கான பயனர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.

திடீர் உயர்வு

3 நாட்களில் 3 ஆயிரத்தில் இருந்து 3.5 லட்சமாக இந்த பதிவிறக்கம் அதிகரித்துள்ளது நெட்டிசன்களிடையே ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

என்ன காரணம்?

கடந்த வாரம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமூக ஊடக பயனர்களை அரட்டை செயலிக்கு மாறுமாறு வலியுறுத்தினார், இது "இலவசம், பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பானது மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. சுதேசியை ஏற்றுக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயன்பாடுகளுக்கு மாறுமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.