இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் ஒன்று ஆப்பிள். இந்த நிறுவனம் ஸ்மார்ட் போன்களுடன் சேர்ந்து பயன்படுத்த ஸ்மார்ட் வாட்ச்களையும் விற்பனை செய்து வருகிறது. அதில் இருக்கும் வசதிகள் பலரையும் கவர்ந்துள்ளது. இதன்காரணமாக சாம்சங், எம்.ஐ உள்ளிட்ட வாட்ச்களுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளது. 


இந்நிலையில் ஆப்பிள் வாட்ச் பயன்படுத்துபவர்களுக்கு இந்திய கணினி அவசர கால குழு (CERT-in) ஒரு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி ஆப்பிள் வாட்ச்களை வைத்திருக்கும் நபர்கள் 8.7 வாட்ச்ஓஎஸிற்கு குறைவாக வைத்திருந்தால் அதில் சில பிரச்னைகள் வரும் என்று எச்சரித்துள்ளது. 


இந்த ஐஓஎஸ் கொண்ட ஆப்பிள் வாட்ச்களை ஹேக்கர்கள் எளிதாக நுழைந்து சில கோர்டுகளை மாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது இந்த வாட்ச்களில் ஹேக்கர்கள் ஒரு கோரிக்கையை அனுப்பி எளிதாக பாதுகாப்பு அம்சங்களை உடைத்து விட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் பல்வேறு தகவல்களை எடுப்பது, ஆடியோ, வீடியோ உள்ளிட்ட விஷயங்களை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



எனினும் இந்த வகை வாட்ச்களை வைத்திருப்பவர்கள் ஆப்பிள் 8.7 வாட்ச் ஓஎஸ் பாதுகாப்பு அப்டேட் செய்தால் இவற்றை சரி செய்துவிட முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இதை உடனடியாக செய்யாவிட்டால் அவர்களுடைய வாட்ச்கள் எளிதாக ஹேக் செய்யப்படும் நிலை உருவாகிவிடும். இந்த பாதுகாப்பு குறைப்பாடு தொடர்பாக ஆப்பிள் நிறுவனமே தன்னுடைய அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவித்துள்ளது. அத்துடன் இதற்கு தேவையான பாதுகாப்பு அப்டேட்களையும் வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக ஆப்பிள் வாட்ச் வைத்திருப்பவர்கள் இதை உடனடியாக பார்த்து அப்டேட் செய்வது நல்லது என்று தொழில்நுட்ப வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 


முன்னதாக கடந்த மே மாதம் கணினி அவசரகால ஆப்பிள் தொடர்பாக ஒரு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அதில்,  "Apple Mac OS இல் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அவை ரிமோட் அட்டாக்கர் மூலம் தன்னிச்சையான குறியீட்டை  (Execution of arbitrary code_இயக்கவும், bypass security ஐ கட்டுப்படுத்தி அதனை நிராகரிக்கவும் முடியும் . " என தெரிவித்திருந்தனர். அதன்பின்னர் தற்போது ஆப்பிள் வாட்ச் தொடர்பாக மற்றொரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க:ப்ளே ஸ்டேஷனில் இப்போ இந்தப் பூனைக்குட்டிதான் ஃபேமஸ்.. ட்ரெண்டோட சேருங்க..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண