தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய தகவல் தேடல் தளமாக கூகுள் இருந்து வருகிறது. இணையதளத்தை பயன்படுத்தும் அனைவரும் கூகுள் தேடல் மூலமாகவே தங்களுடைய தேடல்களை தேடி வருகின்றனர். கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக  மொபைல் போன்கள் ஓஎஸ்களில் ஆப்பிள் நிறுவனம் இருந்து வருகிறது. 


இந்நிலையில் கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக தேடுதல் தளம் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட்ப வலைப்பதிவு செய்யும் ராபர்ட் ஸ்காபிள் என்ற நபர் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி இந்தப் புதிய தேடல் தொடர்பான அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிடும் என்று அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் அது ஆப்பிள் ஐஓஎஸிலுள்ள சிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளார்களுக்கு தேடலை மிகவும் சுலபமாகவும் எளிதாகவும் அமைக்கும் வகையில் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தப் புதிய தேடல் தளம் தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 






இந்தாண்டு ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 16, ஐபேட் ஒஎஸ் 16 மற்றும் வாட்ச் ஒஎஸ் மற்றும் மேக் ஒஎஸ் 13ஆகியவற்றை இந்தாண்டு வெளியிட உள்ளது. இவை தவிர எம்2 மேக்புக் ஏர் மற்றும் எம்2 மேக் மினி  ஆகியவற்றையும் ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாம்சங், ஒன்பிளஸ் உள்ளிட்ட மொபைல் போன்களில் உள்ள Always on Display வசதி விரைவில் ஐபோன்களில் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோனின் 14 ப்ரோ மாடலிலும் சில புதிய வசதிகள் வர உள்ளதாக தெரிகிறது. 


ஆப்பிள் நிறுவனத்தின் இந்தப் புதிய தேடல் தளம் வரும் பட்சத்தில் இது கூகுள் நிறுவனத்திற்கு பெரும் சவலாக இருக்கும் என்று சில வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் கூகுள் தேடலை போல் இது மக்களிடம் பிரபலம் அடைய சில நாட்கள் ஆகும் என்று கருதப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண