Apple Iphone: அடடே..! குறைஞ்ச விலையில் புதிய ஐபோன் 16e, இன்று நள்ளிரவில் அறிமுகப்படுத்தும் ஆப்பிள் - இவ்ளோ அம்சங்களா..
Apple Iphone: ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மலிவு விலை ஐபோனை சர்வதேச சந்தையில் இன்று நள்ளிரவு அறிமுகப்படுத்த உள்ளது.

Apple Iphone: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மலிவு விலை ஐபோன் ஆனது, SE சீரிஸின் தொடர்ச்சியாக இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலிவு விலை ஆப்பிள் ஐபோன்:
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மலிவு விலை ஐபோன் மாடலை வெளியிட தயாராகி வருகிறது. இருப்பினும், வெளியாகியுள்ள தகவல்களின்படி புதிய மாடலானது SE சீரிஸின் தொடர்ச்சியாக இருக்காது எனவும், அந்த பெயரை கொண்டிருக்காமல், புதிய மாடலாக - ஐபோன் 16e என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் முந்தைய SE மாடல்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கலாம். அதனால் அது ஒரு புதிய அடையாளத்தை பெறக்கூடும்.
Just In




ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கடந்த வாரம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், பிப்ரவர் 19ம் தேதி நிறுவனம் அதன் 'குடும்பத்தின் புதிய உறுப்பினரை' அறிவிக்கும் என்று குறிப்பிட்டார். அதன்படி, ஐபோன் SE ஒரு புதிய பெயரைப் பெறும் மற்றும் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் புதியதாக சாதனமாக சந்தைப்படுத்தப்படும் என்பதை இது குறிக்கிறது.
பட்ஜெட்டில் அம்சங்கள் நிறைந்த ஐபோன்:
ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, ஆப்பிளின் ஐபோன் SE சீரிஸ் பாரம்பரியமாக பட்ஜெட்டுக்கு ஏற்ற சாதனங்களுடன் தொடர்புடையது. அவை பழைய ஐபோன் வடிவமைப்புகளை மீண்டும் உருவாக்குகின்றன. புராசசர் மற்றும் நெட்வொர்க் திறன்கள் போன்ற உட்புற அம்சங்களை மட்டுமே மேம்படுத்துகின்றன. இருப்பினும், வெள்யாகியிருக்கும் தகவல்கள், வரவிருக்கும் மாடல் முந்தைய ஃபார்முலாவில் இருந்து கணிசமாக விலகக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.
புதிய ஐபோனில் என்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
ஐபோன் 14 மாடலின் தாக்கத்தில் புதிய மாடல் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், இதில் ஒற்றை லென்ஸ் கேமரா மட்டுமே கொண்டிருக்கும் என தெரிகிறது. ஆனால், ஐபோன் 14 மாடலில் இரட்டை லென்ஸ் கேமரா இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இது ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட், கேமரா கட்டுப்பாட்டு அம்சம் அல்லது தனிப்பயனாக்கக்கூடிய செயல் பொத்தானை கொண்டிருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. காராணம் இவை எதுவுமே ஐபோன் 14 இல் இல்லை.
மற்றொரு முக்கிய மேம்படுத்தல் புராசசராக இருக்கலாம். வரவிருக்கும் மாடலில் A18 சிப் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை சாதனத்தை ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவுடன் இணக்கமாக்கக்கூடும், இது முந்தைய SE சீரிஸில் இருந்து மேலும் தனித்து நிற்க உதவும்.
விலை விவரங்கள்:
மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால், ஐபோன் 16 தொடரின் கீழ் சாதனத்தை பிராண்டிங் செய்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். SE பெயரிலிருந்து விலகிச் செல்வது மட்டுமின்றி, தற்போதைய SE மாடலின் 37 ஆயிரம் ரூபாய் என்பதை காட்டிலும் கூடுதல் விலையை கொண்டிருக்கலாம். குறிப்பாக OLED டிஸ்ப்ளே மற்றும் ஃபேஸ் ஐடி போன்ற எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகளைக் கருத்தில் கொண்டு விலை உயர்வு இருக்கும்.
மறுபுறம், ஆப்பிள் அதன் நீண்டகால அங்கீகாரம் மற்றும் தயாரிப்பு வரிசையில் நெகிழ்வான நிலைப்பாடு காரணமாக SE பிராண்டிங்கைத் தக்க வைத்துக் கொள்ளலாம். அதன் பெயரில் ஒரு எண் இல்லாமல், SE மாடல் வரலாற்று ரீதியாக பல ஆண்டுகளாக பொருத்தமானதாக இருந்து வருகிறது. இது நிலையான, அடையாளம் காணக்கூடிய எண்ட்ரி லெவல் ஆப்ஷன்களை வழங்கும் வாய்ப்பை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்குகிறது.