ஆப்பிள் நிறுவன ஃபோன்களின் மேப்ஸ் அம்சம் எலக்ட்ரானிக் பைக்குகளுக்கு உகந்த வழிகளை தனது கருவிகளில் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் மேப்ஸில் சமீபத்தில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆப்பிள் தனது விரிவான, முப்பரிமாண நகர வரைபட அம்சத்தை சில மாதங்களுக்கு முன்பு கனடாவில் தனது iOS 15 உடன் வெளியிட்டது. இந்த மார்ச் முதல், ஆப்பிள் மேப்ஸ் மற்றும் வானிலை பயன்பாடுகள் கிரிமியாவை உக்ரைனின் ஒரு பகுதியாகக் காட்டத் தொடங்கின. கடந்த 2020ம் ஆண்டில்தான், ஆப்பிள் மேப்ஸ், அருகிலுள்ள நிறுவனங்களைக் கண்டறிய பயனர்களை அனுமதிக்க இந்தியாவில் நியர்பை என்கிற அம்சத்தை இயக்கியது.










ஆப்பிள் iOS அப்ளிகேஷன் டெவலப்பர் ஸ்டீவ் மோசரின் சமீபத்திய ட்வீட்டின் படி, ஆப்பிள் மேப்ஸ் இ-பைக்குகளுக்கான உகந்த வழிகளை கொண்டு வருகிறது. மோசர், 'இ-பைக்' என்ற சொற்றொடருடன் சில கோடுகளின் குறியீட்டைக் கண்டறிந்துள்ளார், மேலும் அவற்றைப் பயன்படுத்தும் நபர்களுக்கு வழிகள் மற்றும் போய் சேரும் நேரம் ஆகியவற்றை மேம்படுத்தும் அம்சம் அப்டேட் செய்யப்பட உள்ளது. இந்த அம்சம் இப்போது ஆப்பிள் வரைபடத்தில் கிடைக்கவில்லை ஆனால் இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.


மின்சார பைக்குகள் செங்குத்தான பாதைகளில் செல்வது சிரமமானதாக இருக்கும். அதனால் 


முன்னர் குறிப்பிட்டபடி, ஆப்பிள் மேப்ஸ்  மற்றும் அதன் வானிலை பயன்பாடுகள் கிரிமியாவை உக்ரைனின் ஒரு பகுதியாகக் காட்டத் தொடங்கின. இந்த மாற்றம் ரஷ்யாவிற்கு வெளியே உள்ள அனைத்து ஆப்பிள் பயனர்களுக்கும் பொருந்தும். இதுவரை, ஆப்பிள் ரஷ்யாவைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து பார்க்கும்போது கிரிமியாவை உக்ரைனின் ஒரு பகுதியாகக் காட்டவில்லை. இருப்பினும், இந்த நிறுவனம் இதுநாள் வரை பிளாக் ஸீ எனப்படும் கருங்கடலை ரஷ்யாவிற்குள் இருந்து பார்க்கும்போது அதை அந்த நாட்டின் ஒருபகுதியாகத்தான் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.