நாட்டில் Apple ஐ-போன் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. 


ஸ்மாட்ஃபோன்களின் ஏற்றுமதி குறித்து இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேசன் (India Cellular and Electronics Association) வெளியிட்டுள்ள அறிக்கை எகனாமிக் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாட்டில் ஸ்மார்ட்ஃபோன்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதற்கு  Apple  நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏப்ரல் - மே மாத ஏற்றுமதி அதிகரிப்பு:


நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல், மே) ஸ்மாட்ஃபோன் எற்றுமதி ரூ.20 ஆயிரம் கோடியை கடந்துள்ளது. இது கடந்தாண்டு இதே நிதியாண்டில் ரூ.9,066 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மாட்ஃபோன்களில் Apple நிறுவனத்தின் பங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட, இந்த்தியாவில் தன்னுடைய விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் Apple நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஐ-போன், சாம்சங், ஆகிய ஸ்மாட்ஃபோன்கள் 80% ஏற்றுமதியாகிறது.


பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் (ஜூன் -21, ஜூன் -24) பயணமாக அமெரிக்க செல்வது இரண்டு நாடுகளுக்குமிடையே புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சந்தை வாய்ப்பு குறித்து தெரிந்து பல நிறுவனங்கள் இங்கு விற்பனை மையத்தை அமைக்க திட்டமிடுகின்றன.


இந்தியாவில் Apple சாதனங்கள்:


Apple நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் கிடைத்தாலும், அவை எதுவுமே அந்நிறுவனத்தால் நேரடியாக இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை.  Apple தனது முதல் ஆன்லைன் சில்லறை விற்பனையை 2020 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், ஆப்பிள் நிறுவனத்திற்கு இருந்த ஒழுங்குமுறை தடைகள் காரணமாக, இந்தியாவில் நேரடி விற்பனை நிலையங்கள் தொடங்கப்படாமலேயே இருந்தன. இதனால், க்ரோமா போன்ற பல்வேறு சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக தான், இந்தியாவில் Apple சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இறக்குமதி வரி மற்றும் விற்பனையாளர்களின் லாபம் ஆகியவை சேரவே, மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களின் விலை சற்றே அதிகமாக உள்ளது.  


விற்பனை நிலையங்களை திறப்பதன் மூலம், Apple சாதனங்களுக்கான சர்வீஸ் உள்ளிட்டவற்றை பயனாளர்கள் நேரடியாக பெறலாம். அதோடு அந்த நிறுவனத்தின் அண்மைகால வெளியீடுகளான iPhone 14, iPad, AirPod, MacBooks, Apple Watches, HomePods மற்றும் Apple தொலைக்காட்சி என அனைத்து சாதனங்களும் கிடைக்கும். அதோடு, Apple சாதனங்களின் விலையும், அந்த குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் கணிசமாக குறையும் என என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏப்ரல் மாத மாத வருவாய் சாதனை


இந்தியாவில் Apple நிறுவனத்தின் விற்பனை மற்றும் வருவாய் குறித்து தகவல்கள் 'Economic Times’ -ல் வெளியிட்டுள்ள ரிப்போட்டில் வெளியானது.  அதன்படி, இரண்டு விற்பனை மையங்களிலிருந்து மாத வருமானமாக ரூ.22 முதல் ரூ.25 கோடி வரை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மும்பை மற்றும் புதுடெல்லியில் உள்ள இரண்டு விற்பனை மையங்களுக்கும் கொடுக்கும் வாடகையை விட லாபம் அதிகம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. விற்பனைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் புதிய முன்னெடுப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.