Iphone 15 Series: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் Navic தொழில்நுட்பம் ஐபோன் 15 மொபைல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஐபோன்  சீரிஸ்:

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக இருப்பது ஐபோன். ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்பட்ட மற்றும் பல்வேறு புதிய அம்சங்களுடன் ஐபோன்கள் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் வெளியான ஐபோன்-X வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து வெளியான ஐபோன் சீரிஸ்11, 12 ஆகியவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேநேரம், ஐபோன் சீரிஸ் 13 மற்றும் 14 மாடல்கள் முந்தைய இரண்டு மாடல்களை விட கூடுதலான கவனத்தை பெற்றது. இந்நிலையில் தான், ஐபோன் 15 சீரிஸ் மாடல் செல்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம்:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் செல்போன்களை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், 15 சீரிஸில் 4 புதிய செல்போன்களையும், அதோடு 2 புதிய ஸ்மார்ட் வாட்ச்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு,  ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 என புதியதாக் இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களும் வெளியாகியுள்ளன. ஐபோன் 15 பல அம்சங்கள் இருந்தாலும், Navic தொழில்நுட்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த்து. 

Continues below advertisement

NAVIC தொழில்நுட்பம்: 

நமது இருப்பிடத்தை  தடமறியவதற்கு ஜிபிஎஸ் என்ற தொழில்நுட்பம் பயன்படுகிறது. பல ஆண்டுகளாக கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட் போன்களிலும் ஜிபிஎஸ் (Global Positioning System) தொழில்நுட்பத்துடன் தான் வருகிறது.  தற்போது பயன்படுத்துப்பட்டு வரும் கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட இருப்பிடம் சார்ந்த அனைத்து செயலிலும் இந்த ஜிபிஎஸ் (Global Positioning System) மூலமாகவே செயல்படுகிறது. இப்படியான சூழலில், 2020ஆம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம் NAVIC என்ற மேம்படுத்தப்பட்ட இடமறியும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது. இது எல்லையோரத்தில் வசிப்பவர்கள், மீனவர்கள், ராணுவத்தினருக்கு உதவிகரமாக இருக்கும். ஜிபிஎஸ் உடன் ஒப்பிடுகையில் Navic தொழில்நுட்பத்தின் துல்லிய திறன் பன்மடங்கு அதிகம். 

ஐபோனில் NAVIC தொழில்நுட்பம்

இந்த இஸ்ரோவின்  NAVIC தொழில்நுட்பம் ஐபோன் 15 சீரியஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இயக்கப்படும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் போல இந்தியாவால் உருவாக்கப்பட்ட மற்றொரு நேவிகேஷன் தொழில்நுட்பம் தான் NAVIC ஆகும். இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த குவால்காம் (Qualcomn) நிறுவனம் இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. குவால்காம் தயாரிக்கும் மொபைல்களில் நேவிகேஷன் அம்சத்தை பயன்படுத்த NAVIC தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. NAVIC தொழில்நுட்பம் இரண்டு வகையான நேவிகேஷன் சேவைகளை வழங்குகிறது. 7 செயற்கைக் கோள்களின் அடிப்படையில் இத்தொழில்நுட்பம் செயல்படுகிறது. 

மேலும், ப்ரோ மாடல்கள் இரண்டிலும் A17 ப்ரோ சிப் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களில் கிடைக்காத செயல்திறனையும்,  உயர்தர கணினிகளுக்கு இணையாக செயல்படும் திறனையும் ஐபோன்களுக்கு வழங்கும் என கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட, உயர் ரக கேமிங் அனுபவங்களை பெறும் வகையிலும் ப்ரோ மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்து குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க 

Whatsapp Channels: இதுவும் வந்துருச்சா.. இனி வாட்ஸ் அப்பிலும் செய்தி வரும்.. வந்தது புதிய அப்டேட்..எப்படி பயன்படுத்துவது?