அமேசான் அலெக்ஸாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் குரலும் புதிதாக இடம் பெற்றுள்ளது. எனவே இனி நாம் எந்த நேரமும் அமிதாப்கிட்ட நாம் எளிதாக பேச முடியும்.


இன்றைய சூழலில் விதவிதமான விளம்பர யுக்திகள் தான் பல்வேறு நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களை அதிகளவில் கொண்டு சேர்க்கிறது. அந்த வகையில் தற்போது அமேசான் நிறுவனம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பாலிவுட் நடிகராக அமிதாப் பச்சனுடன் எப்போது வேண்டுமானாலும், என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம் என்ற வசதியினை அமேசான் அலெக்ஸாவில் கொண்டுள்ளது.  அது எப்படி? அமிதாப் கூட பேச முடியும் நினைக்கிறீங்களா? அதற்கு முதலில் ஏற்கனவே உள்ள அமேசான் அலெக்ஸாவை மக்கள் எப்படி பயன்படுத்திட்டு வருகிறார்கள் என்று தெரிந்துகொள்வோம்.



அமேசான் அலெக்சா என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு சாதனமாகும். இதன் மூலம் நாம் எந்த கேள்விகள் கேட்டாலும் அதற்கானப் பதிலை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் இன்றைய வானிலை அறிவிப்பு, விளையாட்டுத் தொடர்பான செய்திகள், கதைகள், பாடல்கள் என நமக்குப் பிடித்த எதைக்கேட்டாலும் எக்கோ ஸ்பீக்கர் மூலம் நாம் அதனைக்கேட்க முடியும். நம்முடைய கட்டளைக்கு ஏற்று தகவல்களை தெரிவிக்கும்போது stop  என்று கூறினாலே தானாக அதனை நிறுத்திவிடும். இப்படித்தான் இன்று வரை அமேசான் அலெக்ஸாவை நாம் பயன்படுத்தி வருகிறோம்.


இந்த சூழலில் தான், தற்போது  இந்த அனைத்துத் தகவல்கள் உள்பட அமிதாப்பின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்சியமான விஷயங்களைக் கூட அவரது குரலில் வாடிக்கையாளர்கள் கேட்பதற்கு ஏஐ  தொழில்நுட்பத்தைக்கொண்டு புதிய அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுடன் பேசுவதற்காகவே நிச்சயம் அதிக வாடிக்கையாளர்கள் இதனை வாங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். ஏற்கனவே இத்தகைய அம்சம் கடந்த 2019-ஆம் ஆண்டு அமெரிக்க நடிகரும், தயாரிப்பாளருமான சாமுவேல் L. ஜாக்சனின் குரலுடன் அமெரிக்காவிற்கு வந்துள்ளது. தற்போது இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அமிதாப்பின் குரல் அமேசான் அலெக்ஸாவில் இடம் பெற்றுள்ளது.


இந்நிலையில் இதனை எப்படி பெற முடியும் என்று பற்றியும் நாம் தெரிந்துகொள்வோம். ஏற்கனவே அமேசான் அலெக்ஸாவைப் பயன்படுத்துவோர் என்றால் இதனை நீங்கள் மேனுவலாக ஆன் செய்துக்கொள்ளலாம். குறிப்பாக அலெக்ஸாவில் உள்ள மைக்கினை ஆன் செய்து அதன் மூலம் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். இதில் ஏதாவது ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால்? அலெக்சா எனக்கு அமிதாப்பை அறிமுகம் செய்யவும் என்று குரலினைப் பதிவிட்டுக்கொள்ள வேண்டும்.


இதனையடுத்து இதை உறுதி செய்வதற்கு Alexa, enable Amit ji wake word” என்று பதிவிடவேண்டும். தற்போது அமேசான் அலெக்ஸாவில் அமிதாப் குரல் பதிவாகிக்கொள்ளும். பிறகு நீங்கள் Amit ji என்று கூறினாலேபோதும் அவரது குரல் கேட்கும். மேலும் முன்னதே கூறியதுபோல அனைத்து விதமான கேள்விகள், அமிதாப்பின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை அமிதாப் பச்சனின் குரலிலே நாம் கேட்கமுடியும்.  



மேலும் ஆன்டராய்ட் மொபைல்ஃபோன் பயனர்கள் இந்த சேவையைப் பெற வேண்டும் என்று நினைத்தால், ஆண்ட்ராய்டு பயனர்கள் அமேசான் ஷாப்பிங் செயலியில் உள்ள அமைப்புகள் தாவலின் கீழ் உள்ள அலெக்சா பிரிவைப் பார்வையிடலாம் மற்றும் ‘அமித் ஜி என்ற வார்த்தையை (Amit ji’ wake word. )இயக்கலாம். மேலும் இதனைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனர்களும் இதுவொரு வெர்ச்சுவல் வாய்ஸ் அசிஸ்டென்ட் தொழில்நுட்பம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த குரலை நீங்கள் பெற வேண்டும் என்றால் ஆண்டிற்கு ரூ. 149-க்கு எளிதில் பெற்றுவிட முடியும். பாலிவுட் உலகில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள 78 வயதான அமிதாப்பின் குரலில் உள்ள அமேசான் அலெக்ஸா நிச்சயம் அனைவரைக்கும் பிடித்தமானதாகவே இருக்கும் என்பதில் மாற்றமில்லை.