அமேசான் நிறுவனம் அதன் குரல் உதவி கருவியான அலெக்சாவில் ஒரு புதிய அப்டேட்டை புகுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி அலெக்சா இனி யாருடைய குரலையும் மிமிக் செய்ய முடியும். இதனை அந்த நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அதாவது உங்கள் குரலைப் போலவே அலெக்சாவால் பேச முடியும்.


லாஸ் வேகாஸில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில், அமேசான் மூத்த துணைத் தலைவர் ரோஹித் பிரசாத் பேசுகையில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான ஆடியோவைக் கேட்ட பிறகு அலெக்சா எந்த குரலையும் பிரதிபலிக்க அனுமதிக்கும் அமைப்பை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான உருவாக்கி வருகிறது என்றார். கொரோனா நோய்த்தாக்கத்தின் போது நம்மில் பலர் நாம் விரும்பும் ஒருவரை அல்லது நமக்கு நெருக்கமானவரை இழந்துவிட்டோம். அவர்களுக்குப் பிறகு அவர்கள் குறித்த நினைவுகளை நீடிக்கச் செய்வதே இந்த அப்டேட்டின் குறிக்கோள் என பிரசாத் கூறினார்.






எனினும் அமேசான் அத்தகைய அம்சத்தை எப்போது வெளியிடும் என்பதை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார்.


இது குறித்த வீடியோ ஒன்றும் பிரசாத் பேசுகையில் வெளியிடப்பட்டது.அதில் ஒரு குரல்,”பாட்டி எனக்கு விசார்ட் ஆஃப் ஓஸ் படித்துக்காட்ட முடியுமா?” எனக் கேட்கிறது. அதற்கு பாட்டி வயதிலான ஒரு குரல் கதை படிக்கத் தொடங்குகிறது. இந்த வீடியோ பிரசாத் பேசிய கருத்தரங்கத்தில் வெளியிடப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண