Amazon Festival Sale: அமேசான் ஆஃபரில் தூள் கிளப்பும் ரெட்மி 10 சீரிஸ்! நறுக்குனு 5 மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள்!
முருகதாஸ் | 16 Oct 2021 04:10 PM (IST)
அமேசான் பெஸ்டிவல் ஆஃபரில் பல பொருட்களுக்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேட்ஜெட்டுகள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
அமேசான் ஆஃபர்
ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை நிறுவனங்களுக்கு ஏற்ப, மாடலுக்கு ஏற்ப விலை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெட்மி 10 சீரிஸின் 5 மாடல்கள் தள்ளுபடி விலையில் அறிவிக்க்கப்பட்டுள்ளன.
ரெட்மி 10 மாடலானது சந்தையில் ரூ.16999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த அமேசான் ஆஃபரில் இதன் விலை ரூ.14499க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக்ஸிஸ் வங்கி மூலம் பணவர்த்தனை என்றால் மேலும் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்ஸல் மெயின் கேமரா, 8+2+2 மெகாபிக்ஸல்கள் கொண்ட மற்ற மூன்று கேமராக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 6000 mAh கொண்ட பேட்டரியும், 18W அதிவேக சார்ஜிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களுக்கு பெயர்போன மாடலாக Redmi Note 10S உள்ளது. இதன் ஒரிஜினல் விலையானது ரூ.18999ஆக உள்ளது. இந்த மாடல், அமேசான் விற்பனையில் இது ரூ.15999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6.43 இஞ்ச் கொண்ட டிஸ்பிளே, 64 மெகாபிக்ஸல் கொண்ட மெயின் கேமரா, 13 மெகாபிக்ஸன் செல்பி கேமரா உள்ளிட்ட கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 5000mAh கொண்ட பேட்டரி, 33W சார்ஜிங் கொடுக்கப்பட்டுளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மற்றும் 512 ஜிபி போன்ற மெமரி கொண்ட மாடல்களாக இந்த மாடல் உள்ளது.
Redmi Note 10 Lite மாடல் அமேசான் ஆஃபரில் சிறந்த விற்பனையாக உள்ளது. ரூ.16999 விலை நிர்ணயிக்கப்பட்ட இந்த மாடல் ரூ.13999க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழைய போன்கள் எக்ஸேஞ்ச் செய்யப்பட்டால் ரூ.12350 வரை விலை குறைய வாய்ப்புள்ளது. 48மெகாபிக்ஸல் கொண்ட மெயின் கேமரா, 8+2+2 மெகாபிக்ஸல்கள் கொண்ட 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 16எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5020 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
ரெட்மி மாடலில் 5ஜி போன் வாங்க விருப்பமா? அப்படி என்றால் இந்த Redmi Note 10T 5G மாடல் சிறந்த தேர்வாக இருக்கும். ரூ.18999க்கு விற்பனை செய்யப்படும் இந்த மாடல், அமேசான் விற்பனையில் ரூ.16999க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
ரூ.19999க்கு விற்பனை செய்யப்பட்ட Redmi Note 10 Pro மாடல், இந்த ஆஃபரில் ரூ.17999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக்ஸிஸ் வங்கி மூலம் பரிவர்த்தனை என்றால் மேலும் தள்ளுபடி கிடைக்கும். 64 மெகாபிக்ஸல் மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5,020 mAH பேட்டரியும், 33W அதிவேக சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது.