Airtel Vs Jio Vs Vi: ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களில், எதன் பலன் சிறப்பானது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் Vs ஜியோ Vs வோடாஃபோன் ரீசார்ஜ்:
நமது வேகமான வாழ்க்கையில் செல்போன் என்பது மிகவும் அத்தியாவசியமான கருவியாக மாறிவிட்டது. அதற்கு ஒவ்வொரு மாதமும் நமது பட்ஜெட்டில் இருந்து பணத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்காக நாட்டின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின், ரீசார்ஜ் திட்டத்தில் எதை தேர்வு செய்யலாம் என்பதில் எப்போதும் பெருங்குழப்பம் நிலவுகிறது. காரணம் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களுமே ஒரே மாதிரியான கட்டண வரம்பை கொண்டுள்ளன.
ஆனால், அவற்றில் வித்தியாசமான பலன்கள் கிடைக்கின்றன என்பதையே நம்மில் பலர் முழுமையாக உணர்ந்துகொள்ளவில்லை. சில நிறுவனங்கள் ஒடிடி அணுகலையும், சில நிறுவனங்கள் இரவு நேர டேட்டா சேவையும் வழங்க சில நிறுவனங்கள் எளிமையான அழைப்பு மறும் இணைய சேவையை மட்டுமே வழங்குகின்றன. எனவே ஒரு மாதத்திற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என திட்டமிட்டு இருந்தால், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்களின் ரூ.349 ரீசார்ஜ் திட்டத்தின் முழு பலன்கள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு எது சிறந்தது என்பதை ஆராய்ந்து அறியுங்கள்.
ஏர்டெல்லின் ரூ.349-க்கான ரீசார்ஜ் திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349-க்கான திட்டம் 28 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-ஐ இலவசமாக அனுப்பும் வசதி கிடைக்கும். நீங்கள் 5G பகுதியில் வசித்து 5G தொலைபேசி வைத்திருந்தால், உங்களுக்கு வரம்பற்ற 5G டேட்டாவும் கிடைக்கும். நிகழ்ச்சிகளைப் பார்ப்பதையும் இசையைக் கேட்பதையும் விரும்புவோருக்கு இந்தத் திட்டம் சரியான தேர்வாக இருக்கும். காரணம்,
- ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22+ OTT செயலிகளுக்கான அணுகல்)
- ஆப்பிள் மியூசிக்கின் 6 மாத அணுகல்
- 1 வருடத்திற்கு Perplexity Pro அணுகல்
- விங்க் மியூசிக் பிரீமியம் அனுகல் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் இந்த விலை வரம்பில் ஏர்டெல் அதிக பொழுதுபோக்கு பலன்களை வழங்குகிறது.
ஜியோ ரூ.299 & ரூ.329 திட்ட பலன்கள்:
ஜியோவின் ரூ.299-க்கான திட்டம் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-ஐ இலவசமாக அனுப்பலாம். ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றுக்கான அணுகலையும் பெறுவீர்கள். 5ஜி பகுதியில் உங்களிடம் 5ஜி போன் இருந்தால், இந்த திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் பெறுவீர்கள்.
- ரூ.329 ஜியோ திட்டமும் அதேதான், ஆனால் விளம்பரமில்லா இசைக்காக ஜியோசாவ்ன் ப்ரோவிற்கான அணுகலை வழங்குகிறது
- உங்கள் தினசரி டேட்டா முடிந்ததும், இணையம் மிகவும் மெதுவாக (64 Kbps) மாறும்.
Vi ரூ.349 திட்டப் பலன்கள்:
Vi திட்டம் படைப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உணர்கிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ கடுமையான டேட்டா வரம்பைக் கொண்டிருந்தாலும், Vi உங்களுக்கு 1.5GB/நாள், வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 SMS/நாள் வழங்குவது மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகளையும் அள்ளி வீசுகிறது.
- நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி அன்லிமிடெட் டேட்டா
- வார இறுதி டேட்டா மாற்றம் (வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை சேர்த்து வைத்து வார இறுதியில் பயன்படுத்தலாம்)
- டேட்டா பேக்-அப் (மாதம் 2 ஜிபி கூடுதலாக)
- தகுதியுள்ள பயனர்களுக்கு வரம்பற்ற 5G டேட்டா
ஏர்டெல் vs ஜியோ vs Vi - யாருக்கு எது பெஸ்ட்?
- நீங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதோடு, இசையையும் அதிகளவில் கேட்பவராக இருந்தால் ஏர்டெல்லின் ரூ.349 திட்டம் தான் சிறந்தது.
- 5G உடன் ஒரு எளிய திட்டத்தை தேர்வு செய்ய விரும்பினால், ஜியோவின் ரூ.299 திட்டம் சிறந்தது
- அதிக டேட்டாவை குறிப்பாக இரவில் பயன்படுத்துபவராக இருந்தால் Vi ரூ.349 சிறந்தது
விலையை மட்டுமல்ல, உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எப்போதும் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது பல்வேறு வகையிலும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.