ஏர்டெல் பயனாளர்களுக்கு 1 ஆண்டுக்கு செயற்கை நுண்ணறிவு பதில் இயங்குபொறியை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆஃபரை, பாரதி ஏர்டெல் நிறுவனம் அளித்துள்ளது. இதன்மூலம் சுமார் 36 கோடி ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் பயனர்கள், இலவசமாக Perplexity வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள வசதி, ஏர்டெல் பயனாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது.  

Continues below advertisement

இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் சேவை வழங்குநராக இருப்பது பாரதி ஏர்டெல் ஆகும். இது நாடு முழுவதும் 36 கோர்டி மக்களுக்கு டெலிபோன், இணைய சேவையை வழங்குகிறது. இந்த நிலையில் தனது பயனர்களுக்கு Perplexity வசதியை வழங்க உள்ளது.

பெறுவது எப்படி?

ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) செயலி பகுதிக்குச் செல்லவும்.

Continues below advertisement

அதில், rewards என்னும் தெரிவைத் தேர்வு செய்து, இந்த வசதியை பயன்படுத்தலாம்.

ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சேவை

ஏர்டெல் நிறுவனம் மாதந்தோறும் 20 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.1,731)  செயற்கை நுண்ணறிவு விடை தரும் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் வசதியை அளித்து வந்தது. இந்த நிலையில், இந்த வசதியை ஓர் ஆண்டுக்கு இலவசமாகவே அளிக்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.