தொலைத்தொடர்பு நிறுவனமான  ஜியோ தற்போது தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த ஆண்டு பிரபல கூகுள் நிறுவனத்துடன் ஜியோ செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்மாட்ஃபோன் உற்பத்தியில் ஜியோ இறங்குவது உறுதியானது.  இந்த ஆண்டு நடைப்பெற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் 44வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில்  ஜியோ நெக்ஸ்ட் என்ற பெயரிலான தனது முதல் மொபைஃபோன ஜியோ அறிமுகப்படுத்தியது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜியோ மொபைலானது வெளியாவதற்கு முன்னதாக 4 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் மொபைலின் விலை இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் இதன் விலை 6,499 ரூபாயாகும். ஆனால் 1,999 ரூபாய் என்ற முன்தொகையை செலுத்தி 24 மாதங்கள் தவணை முறையில் மீதமுள்ள தொகையை செலுத்தும் வசதி உள்ளது. இதற்காக Always-on plan, large plan , Xl plan, XXl plan என்ற மாதாந்திர விவரக்கட்டணங்கள்  குறித்த வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஜியோவிடமிருந்து வெளியாகும் மூன்றாவது சாதனமாகும். முன்னதாக ஜியோ ஃபோன் மற்றும் ஜியோ ஃபோன்2 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியிருந்தது.







இந்த நிலையில் ஜியோ லேப்டாப் மற்றும் டிவி தயாரிப்பில் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மொபைலை போலவே இதுவும் மலிவு விலையிலேயே விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ லேப்டாப் மற்றும் டிவியில் என்னென்ன வசதிகள் இடம்பெறும் என்பது குறித்த தகவல்கள் தற்போது இடம்பெறவில்லை என்றாலும் ஜியோ லேப்டாப்பானது , jio next 2- ஐ போலவே Pragati OS  இல் இயங்கலாம் என கூறப்படுகிறது.


மொபைலில் இருந்த மொழிப்பெயர்ப்பு வசதிகள் மற்றும் தாய் மொழியில் விவரித்தல் உள்ளிட்ட வசதிகளும் லேப்டாப்பில் இடம்பெற வாய்ப்புகள் இருக்கின்றன.டிவியை பொருத்தவரையில் ஜியோ ஏற்கனவே அதன் ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸுடன் ரெடிமேட் ஸ்மார்ட் இன்டர்ஃபேஸைக் கொண்டிருப்பதால், அதே அனுபவத்தை அதன் ஸ்மார்ட் டிவிக்களிலும் புகுத்தலாம்.  தற்போது OTT க்கான வரவேற்பு அதிகரித்து இருப்பதால் அந்த வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். பட்ஜெட் விலையில் பயனாளர்களை கவரும் ஜியோ நிறுவனம் , முதற்கட்டமாக  இரண்டு வகையான அளவு திரை கொண்ட டிவியை அறிமுகப்படுத்த வாய்ப்பிருக்கிறது. எது எப்படியோ  ஒவ்வொரு ஆண்டும் புது புது சர்ப்ரைஸை அறிமுகப்படுத்தும் ஜியோ அடுத்த ஆண்டு ஜியோ தனது புதிய தயாரிப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிடும் என நம்பலாம்.


Jio Next  ஸ்மார்ட்ஃபோன் வசதிகள் :


1.4 ஜிஹாஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராஸசர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இண்டர்னெல் மெமரி, 720* 1600 பிக்ஸல் ரெசொலுசனை கொடுக்கும் 5.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே. 5 மெகா பிக்ஸல் ரியர் கேமரா, 2 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமாரா இவைகள் அனைத்தும் இயங்க தேவையான பவரை வழங்கும் வகையில் 3000 எம்ஏஹெச் பேட்டரி2, டூயல் சிம் சப்போர்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடவே மெமரியை அதிகப்படுத்திக்கொள்ளும் வகையிலான ஸ்லாட்டையும் கொண்டுள்ளது. இதன் மூலம் 128 ஜிபி மெமரியை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.