இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI நாட்டின் தொலைத்தொடர்புக் கொள்கைகளில் ஒரு திருத்தத்தை  கடந்த ஜனவரி மாதம் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அதன்படி இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடைமுறையில் வைத்திருந்த 28 நாட்கள் பீரிபெய்ட் பிளான்களின் காலக்கெடுவை 30 நாட்களுக்கு மாற்ற வேண்டும் என கட்டாயமாக்கியது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் ப்ரீபெய்டு சலுகைகளில் 30 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் மாற்றியுள்ளன. அதில் ஜியோ நிறுவனத்தின் சமீபத்திய புதிய  டேட்டா பிளான்கள் குறித்து பார்க்கலாம்.


ரூ.181 பேக் :


ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.181 பேக்  குறைந்த விலையிலான 30 நாள் அல்லது ஒரு மாத ப்ரீபெய்ட் திட்டமாகும். பேக் என்பது டேட்டா ஆட்-ஆன் சேவையாகும், மேலும் ஒரு பயனரின் கணக்கில் ஏற்கனவே செல்லுபடியாகும் முதன்மை ப்ரீபெய்ட் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே இது பொருந்தும்.  ஒரு பயனரின் தற்போதைய டேட்டா ஒதுக்கீட்டில் 30ஜிபி 4ஜி டேட்டாவைச் சேர்க்கிறது. இது காலாவதியான பிறகு, பயனர்கள் 64kbps என்ற வரையறுக்கப்பட்ட வேகத்தில் இணைய சேவையை பெறலாம் .




ரூ.241 பேக்


ரூ.241 ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் என்பதும் மேலே  உள்ள  டேட்டா ஆட்-ஆன் திட்டத்தை போலதான். இந்த 30 நாள் திட்டமானது பயனரின் தற்போதைய டேட்டா ஒதுக்கீட்டில் 40GB 4G தரவைச் சேர்க்கிறது. மேலும் 40GBக்குப் பிறகு 64kbps வேகத்தில் வரம்பற்ற இணய அனுகலை மற்ற நன்மைகள் மேலே குறிப்பிட்டுள்ள ரூ.181 பேக்கைப் போலவே இருக்கும்.


ரூ.259 பேக்: 


ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.259 பேக் என்பது அனைத்தையும் உள்ளடக்கிய ப்ரீபெய்ட் திட்டமாகும், இது குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் உள்ளடக்க சேவைகளையும் வழங்குகிறது. இருப்பினும், மற்ற அனைத்து திட்டங்களும் 30-நாள் செல்லுபடியாகும் காலங்களை வழங்கும்போது, ​​ரூ.259 ப்ரீபெய்ட் திட்டம் காலண்டர் மாதத்தின் செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஒவ்வொரு மாதத்திலும் உள்ள நாட்களின் எண்ணிக்கையுடன் மாறுபடும். இதன் மூலம் பயனர்கள் 1.5ஜிபி தினசரி 4ஜி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் இந்தியா முழுவதும் வரம்பற்ற குரல் அழைப்புகளைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டம் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud தொகுக்கப்பட்ட சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது. தினமும் 1.5ஜிபி டேட்டாவைத் தாண்டி, பயனர்கள்  64kbps வேகத்தில் என்ற  வரம்பற்ற இணைய சேவையை தொடரலாம்.


 




ரூ.296 பேக்: 


ரூ.296 ரிலையன்ஸ் ஜியோ பேக் 30 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது. இது மு 25GB 4G டேட்டாவுடன் வருகிறது - அதன் பிறகு வரம்பற்ற 64kbps  இணைய சேவை கிடைக்கும். திட்டத்தின் மற்ற அனைத்து நன்மைகளும் மேலே குறிப்பிட்டுள்ள ரூ.259 திட்டத்தைப் போலவே இருக்கும்.


ரூ.301 பேக்: 


50ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. அது காலாவதியான பிறகு 64கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டாவையும் வழங்குகிறது. மேலே குறிப்பிட்டுள்ள பிற டேட்டா ஆட்-ஆன் திட்டங்கள் வழங்குவதைப் போலவே திட்டத்தின் மற்ற எல்லா அம்சங்களும் அப்படியே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை