ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) ஐபிஎல் அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி சமீபத்தில் அணியின் இன்ஸ்டாகிராம் ஹேண்டிலில் பகிரப்பட்ட ஒரு மியூசிக் வீடியோவில் நடனம் ஆடி இருந்தார். இந்த வீடியோவை யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா இயக்கியுள்ளார், அவர் விராட்டுக்கு ஹூக்-ஸ்டெப் கற்பிப்பதை இப்போது வைரலாகும் BTS (Behind The Screen) வீடியோவில் காணலாம். ஹர்ஷ் உபாத்யாயின் இசையில் தனஸ்ரீ இயக்கி, நடன கோரியோகிராஃபி செய்ய, ஆர்சிபி அணியின் முன்னணி நட்சத்திரங்கள் அந்த பாடலின் அடையாள நடன ஸ்டெப்பை ஆடுகின்றனர். இந்த வீடியோ RCB இன் பரந்த ரசிகர்களை பட்டாளத்தை Never Give up, Don't back down' என்று ஊக்குவிக்கிறது.






நடன இசை வீடியோவை இயக்கி நடனமாடிய அனுபவம் குறித்து பேசிய தனஸ்ரீ வர்மா, "இந்த வீடியோவில் ஆர்சிபி கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆர்சிபி வீரர்களின் ஒவ்வொரு முயற்சியையும் பார்த்து, நான் பாராட்ட ஆரம்பித்தேன். PlayBold மனப்பான்மை, இது விளையாட்டில் மட்டுமல்லாது நமது அன்றாட வாழ்விலும் உதவுகிறது. ஆர்சிபி எனது கூட்டுக் குடும்பம், மேலும் இந்த வீடியோவை அணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் அர்ப்பணிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்." செவ்வாயன்று வெளியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் புதிய மியூசிக் வீடியோவில் ஏபி டி வில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் நவ்தீப் சைனி, தேவ்தத் படிக்கல் ஆகியோரும் நடனமாடுவதை காணலாம்.






ஆர்சிபி தனது இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் ஒற்றுமை மற்றும் தைரியமான விளையாட்டைக் கொண்டாடுகிறோம். ஆர்சிபி நிற ஜெர்சியை அணிந்து, மைதானத்தில் 100 சதவீத ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து வீரர்களுக்கும் சிறப்பு நன்றி" என தலைப்பிட்டுள்ளது. ஐபிஎல் 2022 மெகா ஏலம் நெருங்கும் நிலையில், ஆர்சிபி இந்த உணர்வையும் அணியின் ஒற்றுமையையும் வீடியோ மூலம் கொண்டாடுகிறது. மெகா ஏலத்தில் RTM முறை கொண்டு பழைய வீரர்களை தக்கவைக்கும் ஆப்ஷன் இல்லாததால், எல்லா அணிகளுமே நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆர்சிபி அணியில் கேப்டன் விராட் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரை ஆர்சிபி தக்கவைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அவர்களைத் தவிர, RCB அவர்கள் நான்கு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக யுஸ்வேந்திர சாஹலையும், தேவ்தத் படிக்கல்லையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என தெரிகிறது.