இந்திய அணி வீரர்கள் வருகிற ஜூன் 18-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தயார்நிலையில் வருகிறது. ஆனால் இந்திய அணி வீரர்கள் பெரும்பாலான நேரத்தை தனிமைப்படுத்தலில் செலவிட்டுள்ள நிலையில், தற்போது களத்திற்கு திரும்பி இருக்கும் இந்திய அணி வீரர்கள் இன்று முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். இந்திய அணி வீரர்களே இரு குழுவாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடினர்.






காலையில் தீவிர பயிற்சி, பிற்பகலில் பயிற்ச்சி ஆட்டம் என முழு வீச்சில் தயாராகி வரும் இந்திய அணி வீரர்களின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிசிசிஐ.






கேப்டன் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், புஜாரா என இந்திய அணி வீரர்கள் அனைவரும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுவரும் காணொளி காட்சியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு "இறுதி போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணி" என குறிப்பிட்டுள்ளது.






முன்னதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிசிசிஐ "இன்னும் ஒரு வாரம் தான் கவுண்ட் டவுன் தொடங்கியது. நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ள இந்திய அணிக்கு பின் வாருங்கள்" என பதிவிட்டிருந்தது. 






இந்நிலையில் நேற்றைய தினம் இந்திய அணி முதல் நாள் வலை பயிற்சியை துவங்கியது அதுகுறித்து பதிவிட்டுள்ள பிசிசிஐ "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முழு வீச்சில் தயாராகும் இந்திய அணி" என்று. இப்படி இந்திய அணி இறுதி போட்டி நடைபெறும் சவுதாம்ப்டன் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த உடன் ஜூன் 15-ஆம் தேதி சவுதாம்ப்டன் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.