ஐ.பி.எல்.க்குப் பிறகு இந்தியாவில் அதிகம் கவனம் பெறும் கிரிக்கெட் போட்டித் தொடர் என்பது ரஞ்கிக் கோப்பை. ரஞ்சிக் கோப்பையில் நன்கு விளையாடி முத்திரை பதிக்கும் வீரர்கள், ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றனர். அவ்வகையில் பெறும் கவத்தினைப் பெற்ற ரஞ்சி கோப்பையில் மும்பை மற்றூம் உத்தரகண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டியில்  இமாலய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.






87வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் உத்தரகண்ட் அணியினை 725 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியினை பதிவு செய்தது மும்பை. இந்த வெற்றியின் மூலம் ஒரு அணி மற்றொரு அணியினை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைப் பெற்றது எனும் உலக சாதனையினை படைத்துள்ளது.


87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4 கால்இறுதி ஆட்டங்கள் (5 நாள் ஆட்டம்) பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை அணி, உத்தரகாண்டுடன் மோதியது.  முதலில் பேட்டிங் செய்த பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.4 ஓவர்களில் 8  விக்கெட்டுக்கு 647 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சுவேத் பார்கர் 447 பந்துகளி 21 ஃபேர் மற்றும் 4 சிக்ஸ் விளாசி  இரட்டை சதம் அடித்து அசத்தினார்.


அதை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய உத்தரகாண்ட் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மும்பையின் ஷமேஸ் முலானி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்து மீண்டும் 'டிக்ளேர்' செய்தது. 795 ரன்கள் என்ற மிக இமாலய இலக்குடன் உத்தரகாண்ட் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி இன்று 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.


இதில் மும்பையின் குல்கர்னி, தனுஷ்கோட்டியன் மற்றும் ஷமேஸ் முலானி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தனர்.  இதன் மூலம் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி (ரன்கள் அடிப்படையில் ) என்ற உலக சாதனையை மும்பை அணி படைத்துள்ளது. இதற்கு முன்னர் வங்காள அணி ஒடிசாவை 540 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே ரஞ்சிக்கோப்பை சாதனையாக இருந்தது.