டென்னிஸ் உலகில் மிகவும் உயரிய தொடர்களில் ஒன்று விம்பிள்டன் போட்டித் தொடர். இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் தொடர் ஜூன் 26ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ஆம் தேதி அதாவது இன்று முடிவடைகிறது. இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் டென்னிஸ் உலகின் இரண்டு தலை சிறந்த வீரர்களான, நோவக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் மோதிக்கொள்கின்றனர்.  இவர்கள் இருவரும் இதுவரை இரண்டு போட்டிகளில்ர்ல மட்டுமே விளையாடியுள்ளனர். 


இவர்களின் முதல் போட்டி 2022 இல் மாட்ரிட் மாஸ்டர்ஸில் நடந்தது, அங்கு அல்கராஸ் 6-7 (5), 7-5, 7-6 (5) அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார். இதற்கடுத்து, ரோலண்ட் - காரோஸ் 2023அரையிறுதியில் இருவரும் மோதிக்கொண்டனர்.  இந்த போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். அந்த போட்டியில்  6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.


விம்பிள்டன் 2023 இறுதிப் போட்டி அல்கராசும் ஜோகோவிச்சும் புல்வெளியில் சந்தித்தது முதல் முறையாகும், மேலும் களிமண் இல்லாத மேற்பரப்பில் அவர்கள் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.


வயது வித்தியாசம்


நோவக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்கராஸ்  இடையேயான வயது வித்தியாசம் என்பது, இவர்களுக்கு இடையில் உள்ள வயது வித்தியாசம் 15 ஆண்டுகள் மற்றும் 349 நாட்கள். இது இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும் வீரர்களுக்கு இடையிலான இரண்டாவது அதிகபட்ச வயது வித்தியாசம் ஆகும். இதற்கு முன்னர், 1974 விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 39 வயதான கென் ரோஸ்வால் 21 வயதான ஜிம்மி கானர்ஸுக்கு எதிராக மோதியதுதான்  அதிக வயது வித்தியாசம் கொண்ட வீரர்கள் களமிறங்கிய இறுதிப் போட்டியில் இந்த போட்டிதான் முதல் இடத்தில் உள்ளது.  இந்தப் போட்டியில் கானர்ஸ் 6-1, 6-1, 6-4 என்ற கணக்கில் போட்டியை வென்றார்.


உலக நம்பர் 1 மற்றும் நம்பர் 2 இடையே கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி 


தற்போது, ​​கார்லோஸ் அல்கராஸ் உலகின் நம்பர் 1 ஆகவும், நோவக் ஜோகோவிச் உலகின் நம்பர் 2 ஆகவும் உள்ளனர். இவர்களுக்கு இடையில் இன்று மாலை 6.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது. 


ஜோகோவிச் வெற்றி பெற்றால், விம்பிள்டனில் அதிக வயதானவர் என்ற பெருமையை பெறுவார்


36 ஆண்டுகள் மற்றும் 55 நாட்களில் வயதில் உள்ள நோவக் ஜோகோவிச் 2023ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால், அவர் அதிக வயதில் விம்பிள்டன் பதக்கத்தை வென்ற  போட்டியின் மூத்த வெற்றியாளர் என்ற பெருமையைப் பெறுவார். 


தற்போது, ​​மிக வயதான விம்பிள்டன் சாம்பியனான ரோஜர் ஃபெடரர் தான் 2017 ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை 35 வயதில் மரின் சிலிக்கிற்கு எதிராக நேர் செட்களில் வென்றார்.


அல்கராஸ் வெற்றி பெற்றால், 21 வயதிற்குள் பல கிராண்ட்ஸ்லாம்களை வென்ற ஆறாவது வீரர் ஆவார்


அதேபோல், 2022 யுஎஸ் ஓபனை 19 வயதில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று டென்னிஸ் உலகையே தன்பக்கம் ஈர்த்த கார்லோஸ் தற்போது 2023ஆம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர் இந்த போட்டியில்வெற்றி பெற்றால், 20 வயதில் தனது இரண்டாவது பெரிய வெற்றியைப் பெறுவார்.


இதற்கு முன்னர், 21 வயதிற்குள் ஏற்கனவே ஐந்து வீரர்கள் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். அதில் பிஜோர்ன் போர்க், போரிஸ் பெக்கர், கோரன் இவானிசெவிக், டேவிட் நல்பாண்டியன் மற்றும் ரஃபேல் நடால் ஆகியோருடன் கார்லோஸ் இணைவார்.