Mirabai Chanu Wins Silver: பளுதூக்குதல் போட்டி...வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திய இந்தியாவின் மீராபாய் சானு

உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

Continues below advertisement

உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில்  இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

Continues below advertisement

உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி கொலம்பியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 49 கிலோ எடைப்பிரிவில் 200 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை வீழ்த்தி மீரா பாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு சீனரான ஜியாங் ஹுய்ஹுவா, 206 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் rசானு பெற்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும். 

இதற்கு முன்பு 2017-ஆம் ஆண்டு 194 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். சமீபத்தில் 2022ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் 201 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார்.  அதன்படி, கிளின் அண்டு ஜெர்க் பிரிவு நடைபெற்றது. அதில் தன்னுடைய முதல் முயற்சியில் மீராபாய் சானு 109 கிலோ எடையை தூக்கினார். தன்னுடைய இரண்டாவது முயற்சியில் அவர் 113 கிலோ எடையை தூக்கினார். மூன்றாவது முயற்சியில் 115 கிலோ எடையை தூக்க முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்தார். இருப்பினும் மொத்தமாக ஸ்நாட்ச் மற்றும் கிளின் அண்டு ஜெர்க் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து 201 கிலோ எடையை தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையை படைத்தார். அத்துடன் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.


மேலும் படிக்க

Ind vs Bang, 2nd ODI: வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி... தொடரைத் தக்க வைக்குமா இந்திய அணி?

.

Continues below advertisement
Sponsored Links by Taboola