கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்த செஃப் போல ஆம்லேட்டை அசால்ட்டாய் தூக்கிப் போட்டு திருப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் ஜாம்பவான்களுள் ஒருவரான சச்சின் டெண்டுல்கரை ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட்டில் பார்த்து ரசிக்க முடியாவிட்டாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி தன் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.


கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டு சச்சின் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று உணவு. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்பவர்களுக்கும், சச்சினின் தீவிர ரசிகர்களுக்கும் இந்த உண்மை தெரியும்.


 






36 மில்லியனுக்கும் மேற்பட்ட நெட்டிசன்கள் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் நிலையில், முன்னதாக அவர் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.


அதில் ஹோட்டெல் ஒன்றில் செஃப்களுடன் இணைந்து சமைக்கும் சச்சின், ஆம்லேட்டை திருப்புவதற்கான சரியா நேரத்துக்காக காத்திருக்கிறார்.


பொறுமையுடன் நின்று சரியான தருணத்தில் ஆம்லேட்டை கிட்டத்தட்ட தேர்ந்த சமையல்காரர் போல் தூக்கிப்போட்டு சச்சின் கேட்ச் பிடித்ததும் சுற்றியிருப்பவர்கள் குதூகலித்து கைதட்டுகிறார்கள்.


 






ஆம்லேட்டை கேட்ச் பிடித்ததும் ‘ஃப்ளிக் ஷாட்’( flick shot) என குறும்பாக சச்சின் கூறும் இந்த வீடியோ 4 லட்சத்து 40 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து இணையத்தில் வைரலாகியுள்ளது.