பஹ்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கால்பந்து அணி, போட்டிகளில் விளையாடி வருகிறது. நட்பு ரீதியான போட்டியில் பெலாரஸ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதில் கோல்கள் அடித்து 3-0 என்ற கோல் கணக்கில் பெலாரஸ் அணி வென்றது. இந்த போட்டி தொடங்கும் முன், வெவ்வேறு கடவுள் நம்பிக்கையை கொண்ட இந்திய கால்பந்து அணி வீரர்கள் பிரார்த்தனை செய்வது போன்ற புகைப்படம் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறது. 






மார்ச் 26-ம் தேதி இந்திய கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த கால்பந்து ரசிகர்கள், அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்கும் இந்திய நாட்டின் பெருமையை இந்த புகைப்படம் உணர்த்துகிறது என கமெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.






கடைசியாக 2012-ம் ஆண்டு அஜர்பைஜானில் விளையாடிய பிறகு, ஒரு UEFA அணிக்கு எதிராக இந்தியாவின் முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும். இந்த போட்டியில் தோற்றிருந்தாலும், இந்திய அணி வீரர்களின் ஒற்றுமைக்கு அதிக பாராட்டுகள் குவிந்து வருகிறது. வேற்றுமைகள் நிறைய இருந்தாலும், ஒற்றுமையால் ஒன்றுபட்டிருக்கும் இந்தியர்களை மேலும் இணக்கமாக்குவது விளையாட்டு போட்டிகளாகதான் இருக்கிறது. 




மேலும் படிக்க: Surya 41 : 18 ஆண்டுகளுக்கு பின் பாலாவுடன் மீண்டும் ஒரு பயணம்... ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த சூர்யா!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண