அமெரிக்காவில் நடைபெற்ற உலக அக்குவாட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீராங்கனை ஒருவர் நீருக்குள்ளேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 வயது வீராங்கனை
அனிதா அல்வாரெஸ் எனும் அமெரிக்க வீரங்கானை இந்தப் போட்டியின்போது மயங்கி விழுந்து நீச்சல் குளத்தின் அடியில் சரிந்த நிலையில், நல்வாய்ப்பாக அவர் மீட்கப்பட்ட்டார்.
25 வயது அனிதா ஆல்வாரெஸ் மயங்கியதை அடுத்து விரைந்து சென்ற அவரது பயிற்சியாளர் ஆண்டிரியா, மூச்சுபேச்சின்றிக் கிடந்த வீராங்கனைக்கு முதலுதவி செய்தார். மைதானத்தில் இச்சம்பவம் பெரும் பயத்தை ஏற்படுத்திய நிலையில், வீராங்கனை அனிதா தொடர்ந்து நீச்சல் குளத்தின் மருத்துவ மையத்திற்கு ஸ்ட்ரெச்சரில் கூட்டிச் செல்லப்பட்டார்.
பயத்தில் உறைந்த பார்வையாளர்கள்
தொடர்ந்து மருத்துவ உதவி பெற்று அனிதா குணமடைந்த நிலையில், தற்போது அவர் உடல்நலன் தேறி நன்றாக இருப்பதாக நீச்சல் குழு அறிக்கை வெளியாகி உள்ளது.
”இச்சம்பவம் பெரும் பயத்தை அளித்துள்ளது. லைஃப்கார்ட்ஸ் அந்த இடத்தில் இல்லாத நிலையில், நான் அங்கு குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என நீச்சல் வீராங்கனையின் பயிற்சியாளர் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னதாக இச்சம்பவம் குறித்து வானொலியில் பேசிய பயிற்சியாளர், ”அல்வாரெஸ் தனது வழக்கமான நேரத்தை விட அதிகம் எடுத்துக் கொண்டதால் தான் மயக்கமைடந்தார். அவருடைய நுரையீரலில் தண்ணீர் நிரம்பி இருந்தது. அவர் மீண்டும் சுவாசிக்க ஆரம்பித்தவுடன் எல்லாம் சரியாகிவிட்டது" என்று அவர் கூறினார்.
நலம்பெற்ற வீராங்கனை
"அவர் மயங்கி விழுந்த நேரத்தில் எதுவும் சரியாக இல்லை என நான் உணர்ந்தேன். நான் லைஃப்கார்டுகளை தண்ணீரில் இறங்கும்படி கத்தினேன். ஆனால் நான் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
அனிதா இப்போது நலமாக உள்ளார். மருத்துவர்களும் அவர் நலமுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள். வியாழன் முழுவதும் ஓவெடுத்தபின் அவர் மீண்டும் அணி திரும்ப முடியுமா என்பதை மருத்துவர்கள் தீர்மானிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்