கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட்டர்கள் சமூக வலைதளத்தில் ‘ஆக்டீவ்வாக’ உள்ளது வழக்கமாகிவிட்டது. இவ்வரிசையில், இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் வாசிம் ஜாபர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். வாசிம் ஜாபரின் ட்விட்டர் பக்கத்தை 380k பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், வாசிம் ஜாபருக்கும், முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகனுக்கும் மீண்டும் ஒரு முறை ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது.


இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரையும் கருத்தில், கொண்டு, இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்த வாகன், “கேன் வில்லியம்சன் இந்தியனாக இருந்திருந்தால் அவர்தான் சிறந்த டெஸ்ட் வீரராக கருதப்பட்டிருப்பார். சில லைக்ஸ் மற்றும் க்ளிக்ஸ்களுக்காக விராட் கோலிதான் சிறந்த பேட்ஸ்மேன் என்று சிலர் குறிப்பிட்டு வருகிறார்கள்” என்று கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார்.


இதற்கு பதிலளித்துள்ள வாசிம் ஜாபர், “ஹிரித்திக் ரோஷனுக்கு ஒரு விரல் அதிகம். ஆனால், அவரைவிட மைக்கல் வாகன்தான் அதை பயன்படுத்தி மற்றவர்களை வம்பிற்கு இழுத்து வருகிறார்” என தெரிவித்திருந்தார். வாசிமின் கருத்திற்கு நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பு. பாலிவுட் நடிகர் ஹிரித்தி ரோஷனுக்கு ஒரு கையில், ஆறு விரல்கள் உள்ளன. அந்த புகைப்படத்தை பதிவிட்டும், மீம்ஸ் பதிவிட்டும் மைக்கேல் வாகனுக்கு எதிராக கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.  






வாசிமின் கமெண்ட், பல்லாயிரம் கைக்குகளையும், ரீ-ட்விட்டுகளையும் பெற்று வரும் நிலையில், மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான ஜெயதேவ் உதன்கட், இதற்கு ரிப்ளை செய்துள்ளார். “வாசீம் பாய்” என பதிவிட்டு இரண்டு ஸ்மைலிகளை தெறிக்கவிட்டிருக்கும் உனத்கட், வாகனுக்கு எதிராக ட்விட்டரில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


எது எப்படியோ, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். கேட்பன் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.






கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கே.எல் ராகுல், சஹா ஆகியோர் உடற்தகுதி நிரூபணம் செய்ய வேண்டும். சப்ஸ்டியூட் வீரர்களாக அபிமென்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நக்வஸ்வல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.