டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று அசத்தினர். அதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்டு 24ஆம் தேதி முதல் பாராலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் தொடங்குகின்றன. இம்முறை இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளைச் சேர்ந்த 54 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ பாராலிம்லிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழ்நாட்டின் தங்கவேலு மாரியப்பன் டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார். இந்த முறையும், பதக்கத்தை வென்று நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரியோ பாராலிம்பிக்கில், 19 வீரர் வீராங்கனைகளுடன் களமிறங்கிய இந்தியா, 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் பாராலிம்பிக் வரலாற்றில் தனது சிறந்த பர்ஃபாமென்ஸை பதிவு செய்தது.இந்நிலையில், மூன்று மடங்கு அதிக வீரர் வீராங்கனைகளுடன் டோக்கியோ சென்றிருக்கும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

விளையாட்டு  வீராங்கனை வீரர் மொத்தம்
வில்வித்தை 1 4 5
தடகளம் 4 20 24
பேட்மிண்டன் 2 5 7
கேனோ ஸ்ப்ரிண்ட் என்ற படகு போட்டி 1 0 1
பவர் லிஃப்டிங் 1 1 2
துப்பாகிச் சுடுதல் 2 8 10
நீச்சல் 2 0 2
டேபிள் டென்னிஸ் 0 2 2
டேக்வாண்டோ 1 0 1

பாராலிம்பிக் போட்டிகளில், உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். 

வில்வித்தை: ராகேஷ் குமார், ஷ்யாம் சுந்தர் ஸ்வாமி, ஹர்விந்தர் சிங், விவேக் சிக்ரா, ஜோட்தி பால்யான்

தடகளம்:

உயரம் தாண்டுதல்: நிஷாத் குமார், ராம் பால், வருண் சிங் பாட்டி, ஷரத் குமார், மாரியப்பன் தங்கவேலு

குண்டு எறிதல்: அரவிந்த், சோமன் ரானா, பாக்கியஸ்ரீ மாதவராவ் ஜாதவ்

வட்டு எறிதல்: யோகேஷ் கத்தூனியா

ஈட்டி எறிதல்: தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார், டேக் சந்த், ரஞ்சித் பாட்டி, சந்தீப் செளதிரி, சுமீத் அந்தில்

க்ளம் த்ரோ: தரம்பிர், அமித் குமார் சரோஹா, ஏக்தா ப்யான், ஆஷிஷ் லக்ரா

100 மீ ஓட்டம்: சிம்ரன் ஷர்மா

பேட்மிண்டன்: ப்ரமோத் பாகத், மனோஜ் சர்கார், சுஹாஸ், தருண் தில்லோன், கிருஷ்ணா, பலக் கோலி, பர்மார் பருள், தல்சுக்பாய்

கேனோ ஸ்ப்ரிண்ட்: ப்ரச்சி யாதவ்

பவர் லிஃப்டிங்: ஜெய் தீப், சகினா காத்தூன்

துப்பாக்கி சுடுதல்: மணிஷ் நார்வால், தீபேந்தர் சிங், சிங் ராஜ், ருபீனா ஃப்ரான்சிஸ், ஆகாஷ், ராகுல் ஜகர், தீபக், ஸ்வரூப், அவானி லெக்ரா, சித்தார்தா பாலு.

நீச்சல்: சுயேஷ் நாராயணன், முகுந்தன் நிரஞ்சன்

டேபிள் டென்னிஸ்: பவினாபென், சோனல்பென்.

டேக்வாண்டோ: அருணா தன்வர்.