பாராலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் இந்திய அணி அதிபட்சமாக ஒரே தொடரில் மொத்தமாகவே அதிகபட்சமாக  4 பதக்கங்களை வென்றுள்ளது. ஆனால் இம்முறை ஒரே நாளில் மூன்று, நான்கு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் இந்த முறை பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி மொத்தமாக அதிக பதக்கங்களை வெல்வது உறுதியாகிவிட்டது. 


இன்றைய நிலவரப்படி, 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களோடு களத்தில் உள்ளது. இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பேட்மிண்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடகளத்திற்கு பிறகு இந்தியா பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் முக்கியமான விளையாட்டு பேட்மிண்டன் தான். இதில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரர் பிரமோத் பகத், பாலக் கோலி, சுஹேஷ் யேத்திராஜ், மனோஜ் சர்கார் உள்ளிட்ட 7 இந்தியர்கள் பங்கேற்று உள்ளனர். பாரா பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் இந்தியாவுக்கு ஒன்று அல்லது இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


IND vs ENG, 4th Test: 4வது டெஸ்டில் பிரசித் கிருஷ்ணா - அறிவித்தது பிசிசிஐ!






செப்டம்பர் 1-ம் தேதி முடிவின்படி, 10 பதக்கங்களுடன் இந்தியா 34-வது இடத்தில் உள்ளது.  பாரா வீரர் வீராங்கனைகள் வெற்றி பெறுவது அவர்களுக்கு மட்டுமானதாக இல்லாமல், இந்தியாவுக்கு மட்டுமானதாக இல்லாமல், பார்ப்பவர் ஒவ்வொருவருக்குமானதாக நம்பிக்கை தருவதாக உள்ளது. இந்தியா, பாராலிம்பிக் வரலாற்றில்  தனது பெஸ்ட் பர்ஃபாமென்ஸை பதிவு செய்து வருகின்றது.


68 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 147 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 32 தங்கம், 20 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களுடன் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், 30 தங்கம், 24 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 86 பதக்கங்களுடன் கிரேட் பிரட்டன் மூன்றாவது இடத்திலும் களத்தில் உள்ளனர்.


NZ vs BAN: ஆஸி., தான் தூசினு பார்த்தா... நியூசி.,யும் ஈஸியா தூக்கிய பங்களா பாய்ஸ்! டி20 மாஸ்... பங்களாதேஷ்!