ஜப்பானின் ஃபுகுஷிமாவில் தன் பயணத்தைத் தொடங்கியது ஒலிம்பிக்ஸ் தீப்பந்தம்..

பேரழிவின் 10-ஆம் ஆண்டை நினைவுகூறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வில் அழைக்கப்பட்டிருந்த 300 விருந்தினர்களைத் தவிர பிற பார்வையாளர்களுக்கு கொரோனா அச்சம் காரணமாக  அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

Continues below advertisement

கொரோனா தொற்றுப்பரவல் காரணங்களால் தாமதமான ஒலிம்பிக் போட்டிகளுக்கான தீப்பந்தம் ஏற்றும் நிகழ்வு ஜப்பானில் இன்று நிகழ்ந்தது. அந்த நாட்டின் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற ஜூலை மாதம் 23-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வரையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளுக்கான தொடக்க நிகழ்வாகக் கருதப்படும் தீப்பந்தம் ஏற்றும் நிகழ்வு சென்ற ஆண்டே நடைபெற்றிருக்கவேண்டிய நிலையில், கொரோனா பாதிப்பு காரணங்களால் தாமதமானது. 

Continues below advertisement


இந்த நிலையில் தீப்பந்தமேற்றும் நிகழ்வு அணு உலைப் பேரழிவிலிருந்து மீண்ட ஃபுகுஷிமா நகரத்தில் நிகழ்ந்தது. பேரழிவின் 10-ஆம் ஆண்டை நினைவுகூறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வில் அழைக்கப்பட்டிருந்த 300 விருந்தினர்களைத் தவிர பிற பார்வையாளர்களுக்கு கொரோனா அச்சம் காரணமாக  அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ஜப்பான் பெண்கள் கால்பந்து அணி தீப்பந்தைத்தை ஏற்றி ஒலிம்பிக் தீப்பந்த ஓட்டத்தைத் (Olympic Torch Run) தொடங்கி வைத்தது. இந்த தீப்பந்தம் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து நாடுகள் வழியாகப் பயணித்து வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி தலைநகர் டோக்கியோவை வந்தடையும். 

Continues below advertisement
Sponsored Links by Taboola