முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கரூரில் எட்டாம் தேதி தொடக்கம்.


முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கரூர் சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 43 வகையான போட்டிகள் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் எட்டாம் தேதி துவங்கி நடத்தப்பட உள்ளன.


 


இது குறித்து கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:


இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். வயது சான்று, ஆதார் கார்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் படிப்பதற்கான போனோபைட் (bonafite) மற்றும் வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல் (தெளிவாக இருக்க வேண்டும்) ஆகிய சான்றிதழ்கள் போட்டி நடக்கும் இடத்தில் அளிக்க வேண்டும். போட்டியாளர்கள் போட்டி நடக்கும் இடத்திற்கு காலை 7:00 மணிக்கு ஆஜராக வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யாதவர்கள் நேரடியாக போட்டியில் கலந்து கொள்ள இயலாது.


 



 


பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரும் எட்டாம் தேதி வளைகோல் பந்து, கபடி, கால்பந்து போட்டிகள் பத்தாம் தேதி சிலம்பம், தடகளப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், வரும் எட்டாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கிரிக்கெட் போட்டி புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியிலும், 13ஆம் தேதி கூடை பந்து மற்றும் கையுந்து பந்து போட்டி குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும், 13ம் தேதி டேபிள் டென்னிஸ் போட்டி வீனஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், பத்தாம் தேதி நீச்சல் போட்டி வேலம்மாள் சிபிஎஸ்சி பள்ளியிலும், 13ம் தேதி இறகு பந்து போட்டி காந்திகிராமம் பிஸ்கோயர் பேட்மிட்டன் மைதானத்திலும் நடைபெற உள்ளது.


 


 



 


கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு எட்டாம் தேதி வளைகோல் பந்து, கபடி, கால்பந்து போட்டி 11ஆம் தேதி சிலம்பம் மற்றும் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், எட்டாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கிரிக்கெட் செட்டிநாடு பொறியியல் கல்லூரியிலும், 14ஆம் தேதி கூடை பந்து, கையுந்து பந்து போட்டிகள் குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும், 14ஆம் தேதி டேபிள் டென்னிஸ் போட்டி வீனஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், 11-ம் தேதி நீச்சல் போட்டி வேலம்மாள் சிபிஎஸ்இ பள்ளியிலும், 14ஆம் தேதி இறகு பந்து போட்டி காந்திகிராமம் பிஸ்கயர் பேட்மிட்டன் மைதானத்திலும், நடைபெற உள்ளது. பொது பிரிவினருக்கு வரும் 15ஆம் தேதி தடகளம், கபடி, சிலம்பம், கையுந்து பந்து போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், எட்டாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கிரிக்கெட் போட்டி புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியிலும், 15ம் தேதி இறகுபந்து போட்டி காந்திகிராமம் பிஸ்கொயர் பேட்மிட்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.


 


 



 


அரசு ஊழியர்களுக்கு வரும் 16ம் தேதி தடகளம், கபடி, கையுந்து பந்து போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், 15-ம் தேதி செஸ் போட்டி டாக்டர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 15ம் தேதி இறகு பந்து போட்டி காந்திகிராமம் பேட்மிட்டன் மைதானத்திலும் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு வரும் 15ஆம் தேதி தடகளம், கபடி, சிறப்பு கையுந்து பந்து, இறகு பந்து மற்றும் எரிபந்து ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளன. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் மாவட்ட விளையாட்டு அரங்கம் கரூர் அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண் 74017 03493 அல்லது 94447 53760 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.