இன்று ஜூலை 7-ஆம் தேதி மகேந்திர சிங் தோனியோட பிறந்தநாள். காலையிலே இருந்தே ஹேப்பி பர்த் டே தோனி-ங்கிற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆக தொடங்கிவிட்டது. தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை இணையத்தில் வானவெடியாய் ரசிகர்கள் புகைப்படம், வீடியோவை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

 

 



இந்நிலையில் தோனியின் தீவிர ரசிகரான  மதுரை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்  சச்சின் சிவா விடம் பேசினோம்...," கடந்த 12 வருடங்களாக தமிழ்நாட்டு அணிக்கும், கடந்த நான்கு வருடமா இந்திய அணிக்காவும் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். தற்போது இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக பணி செய்கிறேன். எனக்கு இடது கால்களில் சற்று பாதிப்பு இருக்கும். 40% பாதிப்பை கொண்டு விளையாடி வருகிறேன்.

 



ஐ.பி.எல் போல விளையாடப்படும் (டி.பி.எல்) திவாங் பிரிமியர் லீக் தூபாயில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் தமிழக அணி சேம்பியன் சிப்பை தட்டியது. இதற்கு கேப்டனாக பணி செய்தேன். இதற்கு கமலஹாசன் உட்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தது மன நிறைவை தந்தது.  அதே போல் இரண்டு நேசனல் ரெக்கார்ட் செய்துள்ளேன். கடந்த 2018-ல் ஜம்மு, காஷ்மீரில் நடைபெற்ற  கிரிக்கெட் போட்டியில் 64 பந்துகளுக்கு 115 ரன் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனா நின்றது இந்திய அளவில் பாராட்டு கிடைத்தது. அதே போல் 2019-ல் அசாமில் நடைபெற்ற போட்டியில் 16 பந்துகளுக்கு 50 ரன்கள் குவித்தேன். இதனால் (fastest fifty)- பாஸ்ட்டஸ் ஃபிப்ட்டி என்ற இலக்கை அடைந்தேன்.

 



 

பயிற்சியாளர் இல்லாமல் தன்னிச்சையாக பயிற்சி பெற்று வளர்ந்துள்ளேன். அப்போதெல்லாம் சச்சின் டெண்டுல்கர் தான் எனக்கு இன்ஸ்பரேசன். அவருடை வீடியோக்கள் தான் பயிற்சியை அளித்தது. அதன் பின்னர் என்னை பலரும் சச்சின் சிவா என்று அழைக்க ஆரம்பித்தார்கள். தற்போது தல தோனியின் ஸ்டெயிலை பாலோ செய்ய முயற்சித்துள்ளேன். அவருடை 7ம் நம்பர் தான் என்னுடைய ஜெர்சியிலும் இருக்கும்.

 



அவரின் பீல்டிங் செட் செய்யும் திறன் அமோகமாக இருக்கும். சில ஆண்டுகள் நான் கீப்பராக இருந்ததால் அவரின் ஒவ்வொரு கேட்ச்சையும் ரசிப்பேன். எதையும் நம்பிக்கையா செய்வார். இக்கட்டான சூழலில் கூட புதிய பவுலர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஊக்கம் கொடுப்பார். அதனால் எனக்கு தல தோனியை கூடுதலா பிடிக்கும்" என்றார் பெருமையாக.


 

 

தல தோனியின் பிறந்தநாள்  ஒரு நாள் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் கடந்த சில நாட்களாகவே அவரது ஆர்மீக்கள் பெர்த்துடே கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் அவரது பிறந்தநாளான இன்று சொல்லவா வேண்டும். அதளம் செய்துவருகின்றனர்.