பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச டாமர் குத்துச்சண்டை போட்டித்தொடரில், அதிக பதக்கங்களை வென்று பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இத்தொடரில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தமாக 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் ஆகிய பதக்கங்களை குவித்து வென்று அசத்தியுள்ளனர். 

Continues below advertisement

தங்கம் வென்று அசத்திய வீரர், வீராங்கனைகள்

இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி, மகளிருக்கான 70 கிலோ எடைப்பிரிவில் அயர்லாந்தின் எவ்லின் இவி இகாரோவை வீழ்த்தியும், மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவில் ஆர்த்தி தாரியால் ஸ்காட்லாந்தின் கெர்னசான் ஸ்டீபனை வீழ்த்தியும், மகளிருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் அங்குஷிதா போரோ, இங்கிலாந்தின் எல்லா தாம்ப்ஸ்டோனையும், ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் பவன் பர்ட்வால் ஆகியோரும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.

வரலாற்று சாதனை படைத்த தாரகை!

கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 59 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா பன்வாலா, அமெரிக்காவின் அபிகாயில் நெட்டேவை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிஷா பெற்றுள்ளார். இதேபோட்டித்தொடரில் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் நீலம் சிரோஹியும், 76 கிலோ எடை பிரிவில் காஜல் தோசக் ஆகியோரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

Continues below advertisement