ப்ரோ கபடி லீக் சீசன் 12 ரசிகர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களையும், சர்ச்சைகளையும் கொடுத்துள்ளது.  முக்கியமாக தமிழ்த்தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகிய இருவரும் வீரர்கள் தேர்வில் அணியின் தலையீடு இருந்ததாக கூறியது சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருந்த நிலையில் அணியில் என்ன நடக்கிறது என்பதை  அணி நிர்வாகம் கூற வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Continues below advertisement


தமிழ் தலைவாஸ் அணி: 


ப்ரோ கபடி லீக்கின் 12வது சீசனில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி அர்ஜுன் தேஷ்வால், மொயின் ஷஃபாகி, நிதேஷ் குமார், சாகர் ராதே நட்சத்திரங்களுடன் மிக வலுவான அணியை உருவாக்கியதாக ரசிகர்கள் நம்பினர், அந்த நம்பிக்கைக்கு ஏற்றார் போலவே தலைவாஸ் அணியும் ஆரம்பத்திஒல் சிறப்பாக விளையாட ஆரம்பித்தது. 


சீசனின் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி ஜெய்ப்பூர் மற்றும் சென்னை சுற்றுகளில் சீராக விளையாடி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருந்தது. ஆனால், டெல்லியில் நடந்த கடைசி சுற்று போட்டிகளில்  தொடர்ந்து தோல்விகளை தழுவி தமிழ் தலைவாஸ் அணி பரிதாபமாக தோற்று வெளியேறியது.


சர்ச்சையை ஏற்ப்படுத்திய ப்ரஸ்மீட்:


இதனையடுத்து இறுதி லீக் போட்டிக்கு ப்ரஸ்மீட் ஒன்றில் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியன் மற்றும் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் ஆகியோர், அணியின் தோல்விக்கு காரணம் வீரர்கள் தேர்வில் அணி நிர்வாகத்தின்  தலையீடு தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினர். அணியில் யார் விளையாட வேண்டும், யார் மாற்றப்பட வேண்டும் என்பதை அணி நிர்வாகம் முடிவுசெய்ததாக அவர்கள் கூறினர்.


ஆனால், இதே சீசனின் 45 நாள் பயிற்சி முகாமின் போது வீரர்கள் கூறிய பேட்டிகளின்படி, பயிற்சியாளர்களுக்குத் தங்களின் ஆட்டத்திறன், பயிற்சி முறை, அணித் தேர்வு அனைத்திலும் முழு சுதந்திரம் இருந்தது, அணி நிர்வாகம் எந்தவித தலையீடும் செய்யவில்லை என்று தெரிவித்து இருந்தனர்.


சொதப்பிய சஞ்சீவ் பாலியன்:


மேலும், சஞ்சீவ் பாலியனின் சொந்த முடிவுகள் கூட கேள்விக்குறியாக உள்ளன. நல்ல ஃபார்மில் இருந்த சாகர் ராதி மற்றும் மொயின் ஷஃபாகி ஆகியோர் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்டனர். மூன்று ரெய்டுகளில் அவுட்டானால் மொயின் மாற்றப்பட்டார், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில், ஃபார்மில் இல்லாமல் இருந்த  நரேந்தரை முழு போட்டியிலும் ஆட வைத்ததாக குற்றம் சாட்டினர்.


உடைந்த அணியின் உத்வேகம்:


இத்தகைய முரண்பாடுகள் அணி சமநிலையையும், வீரர்களின் நம்பிக்கையையு பாதித்தன. டெல்லி சுற்றில்  ஒரு வெற்றியும் பெற முடியவில்லை, புது ஆட்டநுணுக்கமோ அணியில் பெரிய மாற்றமோ செய்யப்படவில்லை. நிர்வாக  தலையீடு இருந்தது என உண்மையிலேயே இருந்தால், பயிற்சியாளர் ராஜினாமா செய்திருக்கலாம், ஆனால் அவர் அதனை செய்யாமல் சீசன் முடிந்ததும் அணி மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.


இப்போது ஏன் இந்த கேள்வி?


அணித் தலைவர் அர்ஜுன் தேஷ்வாலின் குற்றச்சாட்டு கூட சர்ச்சைக்குரியது. முன்னாள் அணியான யூ.பி. யோதாஸ் எதிராகப் போட்டிகளில் அவரது ஸ்டாட்ஸ் சிறப்பானதாக இல்லை. முக்கிய நேரங்களில் அணியை ஊக்குவிக்க தவறிய நிலையில், “ஆதரவு இல்லை” என்ற அவரது குற்றச்சாட்டு ரசிகர்களுக்கு நம்பக்கூடிய அளவில் இருந்தது இல்லை. 


வீரர்களுக்கு முன்னுரிமை:


தமிழ் தலைவாஸ் அணி ப்ரோ கபடியில் ஆரம்பத்தில் இருந்தே வீரர்கள் நலன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை முன்னுரிமையாகக் கொண்ட அணியாக இருந்து, பல சீசன்களில் அணியின் செயல்பாடு சுமராக இருந்தாலும் எந்தவொரு வீரரோ அல்லது பயிற்சியாளரோ இத்தகைய குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்ததில்லைஆகையால், தற்போதைய குற்றச்சாட்டுகள் அந்த வரலாற்றுக்கும் எதிர்மாறானவையாக தெரிகின்றன.


 விளக்கம் வருமா?


மொத்தத்தில், இந்த சீசனின் தோல்விக்கு அணி நிர்வாகத்தின் தலையீடு காரணமாக அல்ல, அணிக்குள் ஏற்பட்ட ஆட்ட யுக்தி, முடிவெடுக்காத மனநிலை, தலைமைத்துவ குறைவு ஆகியவற்றால் ஏற்பட்டது என்பது தெளிவாகிறது


அணியின் நம்பகத்தன்மைக்கும், லீக்கின் நம்பிக்கைக்கும் தமிழ்த்தலைவாஸ் நிர்வாகமும் இதற்கு விரைவில் பதிலளிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது