பாரிஸ் ஒலிம்பிக் 2024:



எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார். பாய்மர படகுப் போட்டியில் அவர் பங்கேற்கிறார்.


பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பாய்மர படகுப் பிரிவு போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது போட்டியாளராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார். இன்று  பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான இறுதி வாய்ப்பில் அவர் பங்கேற்று இந்த வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.


இதில் பாய்மரப் படகுப் போட்டியில் வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். 67 புள்ளிகள் பெற்று டாப் 5-ல் ஒருவராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ILCA 6 பிரிவில் அவர் பங்கேற்று இருந்தார்.


பிரதமர் மோடி வாழ்த்து:


மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ILCA 6 பிரிவில் அவர் பங்கேற்று இருந்தார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். அந்தவகயில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தை கூறியுள்ளார். அதேபோல் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், ParisOlympics2024-ல் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.


TokyoOlympics-ல் பங்கேற்றதன் மூலம், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற தங்கை நேத்ரா, எதிர்வரும் ஒலிம்பிக் 2024-ல் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும். ” என்று கூறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.