தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் மயிலாடுதுறையில் கடந்த மாதம் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் வாலிபால் மற்றும் கபடி ஆகிய போட்டிகளில் மயிலாடுதுறை மாவட்ட காவலர் அணி முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ள மாநில விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க நேற்று காவலர் அணியினர் பேருந்து மூலம் புறப்பட்டனர். முன்னதாக, மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ள காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்குபெறும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளையாட்டு சீருடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லாஷா மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டு வாழ்ந்து தெரிவித்தனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.