ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ஹமீது ஷின்வாரியை தாலிபான்கள் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். தாலிபானின் புதிய உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானியின் தம்பி அனஸ் ஹக்கானியால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஹமீத் ஷின்வாரி நேற்று பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். ACB தலைவர், அனஸ் ஹக்கானியால் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் கூறினார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு இதுவரை எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. அறிக்கைகளின்படி, புதிய ஏசிபி தலைவர் சிராஜுதீன் ஹக்கானியின் உறவினர் என்பது தெரிகிறது. ஹக்கானி என்பவர்தான், அமெரிக்கா ஆதரவு பெற்ற ஆப்கனிஸ்தான் அரசாங்கத்துடன் தலிபான்கள் போரிட்டபோது, காபூலில் நடந்த பல தாக்குதல்களுடன் தொடர்பு குறித்து போலீசார் சந்தேகித்த நபர். ஏப்ரல் 2021 இல் தான், ரஹ்மதுல்லா குரேஷிக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) ஹமீத் ஷின்வாரி நியமிக்கப்பட்டார். ஷின்வாரி முன்பு 2010 மற்றும் 2012 க்கு இடையில் ACB யின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ளார். 



ஹமீத் ஷின்வாரி ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டாம் என்று உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டார். "ஆஸ்திரேலிய கிரிக்கெட் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் எங்களுக்காக கதவைத் திறந்து வைக்குமாறு நாங்கள் கேட்கிறோம். எங்களுடன் எங்கள் பக்கம் நில்லுங்கள், எங்களை தனிமைப்படுத்தாதீர்கள், எங்கள் கலாச்சார மற்றும் மத சூழலை கருத்தில் கொண்டு, எங்களுக்கு அபராதம் விதிப்பதைத் தவிர்க்கவேண்டும்” என்று சின்வாரி ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டிருந்தார். ஷின்வாரியை நீக்கிய பிறகு, ACB அவர்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நசீபுல்லா ஹக்கானியை புதிய தலைவராக அறிவித்தது. காபூலில் புதிதாக உருவான தாலிபான் அரசு வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி மற்றும் டி 20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்று விளையாடுவதற்கு ஆப்கானிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தங்கள் ஆதரவை தந்துள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தலிபான் தடை விதித்துள்ளது. கடந்த வாரம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட்டிற்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் போட்டியை ரத்து செய்தது.



உலக அளவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டிற்கு மிகவும் அவசியமாக படுகிறது. அதுமட்டுமின்றி உலகெங்கும் பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவிக்க பல விஷயங்கள் செய்து வரும் நிலையில் தாலிபான் இப்படி அறிவித்ததை யாரும் விரும்பவில்லை. "கிரிக்கெட்டுக்கான அனைவருக்குமான விளையாட்டு. ஒவ்வொரு மட்டத்திலும் பெண்களுக்கு இந்த விளையாட்டை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரிக்கிறோம். சமீபத்திய ஊடகங்கள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டை ஆதரிக்காது என்று தெரிவித்ததால் ஹோபார்ட்டில் நடத்தவிருந்த டெஸ்ட் போட்டியை தடை செய்வதை தவிர ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு வேறு வழியில்லை. இந்த முக்கியமான பிரச்சினையில் ஆதரவளித்த ஆஸ்திரேலிய மற்றும் டாஸ்மேனிய அரசாங்கங்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அறிக்கை கூறியது.