கரூர் ரோட்ட்ராக் கிளப், கரூர் வாலிபால் சங்கம் மற்றும் குமாரசாமி பொறியியல் கல்லூரி உட்பட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மூன்றாம் ஆண்டு ஆண்களுக்கான வாலிபால் போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கியது.




இப்போட்டியில் தமிழகத்தில் சிறந்த வாலிபால் அணிகளான லயோலா கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, பொள்ளாச்சி எஸ்டிசி, சென்னை ஜோசப், திருச்சி ஜமால், திருச்சி ஜோசப், பெருந்துறை அரசு கலைக்கல்லூரி, கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரி ஆகிய 8 ஆண்கள் அணிகள் பங்கு கொள்கின்றன. லீக்கம் நாக் அவுட் முறையில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.




இதன் தொடக்க விழாவிற்கு கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். போட்டியை துணை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். கரூர் வாலிபால் சங்க புரவலர் விஎன்சி பாஸ்கர், கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க கௌரவ தலைவர் அட்லஸ் நாச்சி முத்து, கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் பேட்டரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தனபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் நடந்த போட்டியில் திருச்சி ஜோசப் கல்லூரி அணியும், பொள்ளாச்சி எஸ்டிசி அணியும் மோதின. இதில் பொள்ளாச்சி அணி 25; 23 என்ற புள்ளி கணக்கில் திருச்சி அணியை வென்றது.




விழாவில் வாலிபால் சங்க நிர்வாகிகள் கமாலுதீன், சுரேஷ், வெங்கடேசன், பெரியசாமி, ரோட் ராக்ட் நிர்வாகிகள் ஜீவானந்தம், சூர்யா, கவியரசு, அருள் முருகன், பரணிஸ் உட்பட வாலிபால் ரசிகர்கள் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை கரூர் மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், கரூர் ரோட் ட்ராக் சங்க தலைவர் செல்வகுமார் தலைமையில், அதன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


 




கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஆண்களுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி  தொடங்கியது. இதில் சென்னை, மதுரை, பொள்ளாச்சி, கரூர், ஈரோடு உட்பட 8 அணிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற போட்டியில் பொள்ளாச்சி அணியும் கரூர் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில் 25 - 18, 25 - 18, 25 -22 என்ற புள்ளி கணக்கில் பொள்ளாச்சி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது. 2-ம் பரிசை கரூர் அணியும், 3-ம் மற்றும் 4-ம் பரிசை சென்னை அணிகளும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண