தேசிய அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று திரும்பிய மாணவருக்கு உற்சாக வரவேற்பு.
 
படிப்பில் மட்டுமல்லாமல், ஸ்கேட்டிங் விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர் ஆவார்.
 
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே, தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் - சண்முகப்பிரியா தம்பதியர். இவர்களது மகன் தமிழ் இனியன், மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்து வருகிறார். படிப்பில் மட்டுமல்லாமல், ஸ்கேட்டிங் விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர் ஆவார்.
 
விளையாடி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்
 
அண்மையில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 11 வயது பிரிவில் 600 மீட்டர் பிரிவில் இவர் பங்கேற்று, அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தங்கப் பதக்கத்தைப் பெற்று இன்று அவர் சொந்த ஊர் திரும்பிய நிலையில், அவருக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவனின் தாயார் ‘நாம் தமிழர் கட்சி’ சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மானாமதுரை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.