சிறப்பாக விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை கௌரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் மத்திய அரசு அர்ஜுனா விருதும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதும் பயிற்சியாளர்களை பாராட்டும் விதமாக துரோணாச்சார்யா விருது, மெளலானா அபுல் கலாம் ஆசாத் விருது, வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்குகின்றது. 


இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருது ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த ஆண்டு முழுவதும் 6 இறுதிப் போட்டிகளில் விளையாடி அதில் ஐந்து இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது, சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி கடந்த ஆண்டில் ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், கொரியா ஓபன், சுவிஷ் ஓபன் மற்றும் இந்தோனேஷியா ஓபன் தொடர்களில் இறுதிப் போட்டி வரை சென்று வெற்றியும் பெற்றுள்ளது. இந்த ஜோடி சீனா மாஸ்டர்ஸில் மட்டும் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தாலும் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடம் பிடித்தது. 


அர்ஜூனா விருது


நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது ஆக்ரோஷமான பந்து வீச்சினால் உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெறுமையைப் பெற்றார். முகமது ஷமி கடந்த உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகள்  வீழ்த்தி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.  இவர் 7 போட்டிகள் மட்டும் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் முகமது ஷமி அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 


முகமது ஷமி மட்டும் இல்லாமல், ஹாக்கி வீரர்களான கிரிஷன் பகதூர் பதக், சுசீலா ஜான், வில் வித்தை வீரர்கள் ஓஜஸ் பிரவின் தியோடலே மற்றும் அதிதி கோபிசந்த் சுவாமி, குத்துச்சண்டை வீரர் முகமது ஹுசாமுதீன், செஸ் வீராங்கனை வைஷாலி, கோல்ப் வீரர் திக்ஷா சிங் தாகர், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை பிரதாபிஷ் டோமர், மல்யுத்த வீரர் ஆன்டிம் பங்கல் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை அய்ஹிகா முகர்ஜி உட்பட மொத்தம் 17 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.


அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் முகமது ஷமி (கிரிக்கெட்), அஜய் ரெட்டி (பார்வை மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்) ஓஜஸ் பிரவின் தியோடலே, அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை), ஷீதல் தேவி (பாரா வில்வித்தை), பருல் சவுத்ரி மற்றும் எம் ஸ்ரீசங்கர் (தடகளம்), முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை), ஆர் வைஷாலி (செஸ்), திவ்யாகிருதி சிங் மற்றும் அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்), திக்ஷா டாகர் (கோல்ப்), கிரிஷன் பகதூர் பதக் மற்றும் சுஷிலா சானு (ஹாக்கி), பிங்கி ( லவன் பால்), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சூடுதல்), ஆன்டிம் பங்கால் (மல்யுத்தம்), அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்).


துரோணாச்சார்யா விருது


பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சார்யா விருதுக்கு கணேஷ் பிரபாகரன் (மல்லகம்ப்), மகாவீர் சைனி (பாரா தடகளம்), லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (செஸ்) மற்றும் சிவேந்திர சிங் (ஹாக்கி) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.


தியான் சந்த் வாழ்நாள் விருது


கவிதா (கபடி), மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி) ஆகியோர் தியான் சந்த் வாழ்நாள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் கவிதா தமிழ்நாட்டினைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.