இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் பங்கர் மகன் பாலின மாற்று சிகிச்சை மேற்கொண்டு தான் பெண்ணாக மாறியதாக அறிவித்துள்ளார்.
சஞ்சய் பங்கர் மகன்:
இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சங்கர் பங்கரின் மகன் ஆர்யன் தான் பெண்ணாக மாறிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கண்டுபிடித்த நெட்டிசன்ஸ்:
கடந்த ஆண்டே அவர் பெண்ணாக மாறியுள்ளார் என்றும் இதற்கான புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் பெண்ணாக மாறிய அந்த உருமாற்று வீடியோவை( Transformation Video) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தனது தந்தை சஞ்சய் பங்கர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் எம்.எஸ் தோனியுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதை வைத்து தான் அவர் சஞ்சய் பங்கரின் மகன் என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில் தனது பாலின மாற்றம் குறித்து பதிவிட்டுள்ள அவர், கிரிக்கெட்டில் எப்பாடியாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சிய பாதையில் எனது பயணம் தொடங்கியது. இதற்காக பல தியாகங்கள், அர்ப்பணிப்பு போன்றவற்றை மேற்கொண்டேன். தினமும் காலையில் எழுந்து விளையாட்டு மைதானத்துக்கு சென்று பல பேரின் சந்தேகங்கள் மற்றும் அவர்கள் என்னை பற்றி நினைத்த முடிவுகளுக்கு மத்தியில் எனது மனவலிமையை நான் வெளிப்படுத்திக்கொண்டு இருந்தேன்.
எனது விளையாட்டுக்கு மத்தியில் எனக்கு இன்னொரு பயணமும் இருந்தது. அது என்னை நானே சுயமாக கண்டறிய வேண்டியதாக இருந்தது. இதற்காக நான் பல சவால்களை சந்தித்தேன்.இந்த பயணத்தில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது, அது அவ்வளவு எளிமையானதாக அமையவில்லை. ஆனால் நான் யார் என்பதை கண்டறிந்தது தான் எனக்கு மிகப்பெரிய வெற்றி என்று தெரிவித்துள்ளார். ஆர்யன் என்று இருந்த தனது பெயரை தற்போது அனயா என்று மாற்றியுள்ளார்.
தனது இளமை காலத்தில் இஸ்லாம் ஜிம்கானா கிரிக்கெட் கிளப்பில் விளையாடியும் உள்ளார் தற்போது மான்செஸ்டர் குடிப்பெயர்ந்துள்ள அவர் ஹின்க்லெ என்ற கிரிக்கெட் கிளப்பிறகாகவும் விளையாடியுள்ளார்.
முடிவுக்கு வந்த கிரிக்கெட் வாழ்க்கை:
மேலும் சமீபத்தில் ஐசிசி தங்கள் பாலினத்தை மாற்றி கொண்டவர்களுக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி மறுத்திருந்தது. இதனால் ஆர்யனாக இருந்து அனயவாக மாறியுள்ளதால் அவரால் இனிமேல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.