இந்திய வேகநடை ஓட்டப்பந்தய வீரர் சந்தீப் குமார் CWG 2022-இல் ஆண்களுக்கான 10,000 மீட்டர் வேகநடை ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தைப் வென்றுள்ளார். 36 வயதான அவர் தனது தனிப்பட்ட சாதனையாகவும் இந்த வெற்றியின் மூலம் பதிவு செய்துள்ளார். அவர் 38:49.21 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 10,000 மீட்டர் வேகநடை ஓட்டப்பந்தயத்தில் அவரது முந்தைய தனிப்பட்ட சிறந்த நேரம் 46:55.97 ஆக இருந்தது. இதற்கு முன்னதாக, பெண்களுக்கான 10,000 மீட்டர் வேகநடை ஓட்டப்பந்தயத்தில் இந்தியா வெள்ளிப் பதக்கத்தை வென்றது, பிரியங்கா கோஸ்வாமி இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் பெருமாபாலான போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் போட்டி மிகவும் பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டு இருக்கிறது. போட்டி தொடங்கியதில் இருந்து காமன்வெல்த் நாடுகள் பதக்கங்களை பெற தொடர்ந்து முனைப்புடன் விளைடாடி வருகின்றது. போட்டியின் கடைசி நாளுக்கு முந்தைய நாளான இன்று (ஆகஸ்ட், 7) நடந்த ஆண்களுக்கான ஆண்களுக்கான 10,000 மீட்டர் வேகநடை ஓட்டப் பந்தயத்தில் மொத்தம் பத்து வீரர்கள் பங்கேற்றனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் குமார் உட்பட, ஆஸ்திரேலியாவின் டெக்லான் டிங்கே, கெயில் ஸ்வான், ரேடியன் கவுலி ஆகியோறும், இங்கிலாந்தின் சார்பில் டாம் போஸ் வொர்த், கால்லம் வில்கிஷன் ஆகியோறும் களமிறங்கினர். இந்தியாவின் சார்பில் மற்றொரு வீரர் அமித் களமிறங்கினார்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், கனடாவைச் சேர்ந்த ஈவான் டன்ஃபீ 10,000 மீட்டர் தொலைவினை 38:36:37 நிமிடங்களில் கடந்து முதல் இடத்தினைப் பெற்றார். 38:42:33 நிமிடங்களில் 10,000 மீட்டரான போட்டித் தொலைவினை கடந்த ஆஸ்திரேலியாவின் டெக்லான் டிங்கே இரண்டாம் இடம் பிடித்தார். போட்டித் தொலைவான 10,000 மீட்டரை 38:49.21 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார் இந்தியாவின் சந்தீப் குமார். இந்தியாவின் சார்பில் களமிறங்கிய மற்றொரு வீரரான அமித் போட்டித் தொலைவான 10,000 மீட்டரை 43:04:97 நிமிடங்களில் கடந்து ஒன்பதாவது இடத்தினைப் பிடித்துள்ளார். இந்த போட்டியில் நியூசிலாந்தின் க்யுண்டன் ரியூவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்