14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. கடைசி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இதனிடையே, போட்டியின்போது, ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒரு பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது, அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதன் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார்.
சிறந்த ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் விலகியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த அணியில் இருந்து ஏற்கெனவே வேகப்பந்து வீச்சாளார் ஜோஃப்ரா ஆர்ச்சரும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.