பிரபல டென்னிஸ் வீரரும் 22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரஃபேல் நடாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது அவரது முதல் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஃபேல் நடாலுக்கு முதல் குழந்தை

மரியா பிரான்சிஸ்கா பெரெல்லோ மற்றும் ரஃபேல் நடால் தம்பதியர் முதல் குழந்தையைப் பெற்றுள்ளதாக ஸ்பெயின் ஊடகங்கள் நேற்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளன. ரியல் மாட்ரிட் கால்பந்து அணி நடால் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். Diario de Mallorca மற்றும் பிற ஸ்பானிஷ் ஊடகங்கள் நடால் மனைவி Mery Perelló அவர்கள் வசிக்கும் மல்லோர்கா தீவில் உள்ள கிளினிக்கில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததாகக் கூறியுள்ளனர். நடால் மற்றும் பெரெல்லோ பல ஆண்டுகளாக காதல் செய்து வந்த நிலையில், 2019 இல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரபேல் நடால் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று சில வாரங்களில் இந்த மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ள நிலையில், குடும்பத்தோடும், குழந்தையோடும் நேரத்தை கழிப்பதாக முடிவெடுத்துதான் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரியல் மாட்ரிட் ட்வீட்

“எங்கள் அன்பான கௌரவ உறுப்பினர் @RafaelNadal மற்றும் மரியா பெரெல்லோ அவர்களின் முதல் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துகள். இந்த தருணத்தின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதில் உங்களுடன் இணைந்து கொள்கிறோம். ஆல் தி பெஸ்ட்! ”என்று ரியல் மாட்ரிட் சனிக்கிழமை மாலை ட்வீட் செய்தது.

தொடர்புடைய செய்திகள்: Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு மழை வரப்போகுது.. சென்னையில் என்ன நிலை? வானிலை அறிவிப்பு இதோ..

நெகிழ்ச்சி தருணங்கள்

 

ரியல் மாட்ரிட் - நடால் உறவு

ரஃபேல் நடாலை ரியல் மாட்ரிட் வாழ்த்தியது நடாலுக்கும் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் கால்பந்தாட்ட கிளப்பிற்கும் இடையிலான உறவை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம், பாரிஸில் நடந்த போட்டியில் லிவர்பூலை எதிர்த்து ரியல் மாட்ரிட் தங்கள் 14வது ஐரோப்பிய பட்டத்தை வெல்வதைக் காண நடால் மைதானத்திற்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு வாரத்திற்குப் பிறகு அதே நகரத்தில் நடந்த மற்றொரு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை நடால் வென்றார், அவர் இறுதிப் போட்டியில் காஸ்பர் ரூட்டைத் தோற்கடித்தார். நடால், ஆண்கள் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். 14 பிரெஞ்ச் ஓபன், இரண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்கள், இரண்டு விம்பிள்டன் பட்டங்கள் மற்றும் நான்கு யுஎஸ் ஓபன் பட்டங்கள் வென்று வெற்றிகரமான டென்னிஸ் வீரராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.