காமன்வெல்த் போட்டிகள் நாளை முதல் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசிய கொடியை பி.வி.சிந்து ஏந்தி செல்ல உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 


நேற்று காமன்வெல்த் போட்டிகளிலிருந்து ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார். காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழாவில் நீரஜ் சோப்ரா இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தி செல்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் இந்திய கொடியை யார் தொடக்கவிழாவில் ஏந்தி செல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது. இதில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருதப்பட்டது. 


 






இந்தச் சூழலில் தற்போது அதிகாரப்பூர்வமாக பி.வி.சிந்து அறிவிக்கப்பட்டுள்ளார். பி.வி.சிந்து 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றார். அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை வென்றார். அடுத்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். 


பேட்மிண்டன் போட்டிகள்:


காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டிகளில் ஜூலை 29ஆம் தேதி கலப்பு இரட்டையர் போட்டிகளும், ஆகஸ்ட் 3ஆம் தேதி ஒற்றையர் போட்டிகளும் தொடங்க உள்ளன. 


நேரலை:


காமன்வெல்த் போட்டிகள் அனைத்தும் சோனி நெட்வோர்க் செனலில் நேரலையில் வர உள்ளது. அத்துடன் இவை அனைத்தையும் சோனி லிவ் செயலியில் நேரடியாக காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


 






காமன்வெல்த் போட்டிகள் தொடக்க விழா:


காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழா நாளை இரவு இந்திய நேரப்படி 11.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடக்க விழா சோனி நெட்வோர்க் செனல் மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் செனல்களில் நேரடியாக ஒளிப்பரப்பட உள்ளது. மேலும் இந்தத் தொடக்க விழா சோனி லிவ் செயலியிலும் நேரடியாக காண முடியும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண