ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனின் இறுதிப் போட்டியில் புனேரி பல்டன் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதிக்கொண்டனர். மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் புனேரி பல்டன் அணி வெற்றி பெற்றது.
போட்டி தொடங்கியதில் இருந்தே பரபரப்பு தொற்றிக்கொண்டது. போட்டி தொடங்கிய முதல் நிமிடத்தில் இருந்தே புனேரி பல்டன் அணியின் ஆதிக்கம் செலுத்தி வந்தது. புனேரி பல்டன் அணி 3 புள்ளிகள் எடுத்த நிலையில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி தனது புள்ளிக்கணக்கை தொடங்காமல் இருந்தது.
ஹரியானா அணிக்கு அந்த அணியின் ஷிவம் இரண்டு புள்ளிகள் பெற்றுக் கொடுத்து அணியின் புள்ளிக் கணக்கை தொடங்கியது. அதன் பின்னர் அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்து இரு அணிகளும் எடுத்தது. முதல் 10 நிமிடங்கள் முடிவில் புனேரி அணி 4 புள்ளிகளும் ஹரியானா 3 புள்ளிகளும் எடுத்தது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது 10 நிமிடத்தில் புனேரி அணியின் பங்கஜ் மோஹிதி ஹரியானா அணியின் 4 வீரர்களை அவுட் ஆக்கியது மட்டும் இல்லாமல், புனேரி அணியினை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த உதவியது. போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடியும்போது புனேரி பல்டன் அணி 13 புள்ளிகளும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 10 புள்ளிகளும் எடுத்திருந்தது.
இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களில் ஹரியானா ஆல் அவுட் ஆனது. இதனால் புனேரி அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. புனேரி அணியின் சார்பில் பங்கஜ் மோஹித் மற்றும் மோஹிதி கோயாட் ஆகியோர் புள்ளிகளை அள்ளிக் கொடுத்தனர்.
மூன்றாவது 10 புள்ளிகள் முடியும்போது புனேரி அணியின் வசம் போட்டி முழுக்க முழுக்க வந்துவிட்டதால், இந்த போட்டியின் கடைசி 10 நிமிடங்களை புனேரி அணி டைம் பாஸ் செய்து வந்தது. இறுதியில் இந்த போட்டியில் புனேரி அணி 28 - 25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புனேரி அணி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது. புனேரி அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் கோப்பையை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் கோப்பையை இழந்திருந்தது.